Saturday, 22 May 2021

பார்ப்பனீயம்

#பிணங்கள் குவிந்து கொண்டிருக்கும் கொடுங்காலத்திலும் யாரேனும் எரிக்க  இடமில்லாமல் வேறு சாதி தகனமேடைக்கு வந்துவிட்டால்..?

என்கிற எச்சரிக்கை உணர்வோடு புதிதாக பெயின்ட் வாங்கி எழுதியுள்ள அந்த மனசு இருக்கே சார் அது தான் #பார்ப்பனீயம்

செங்கம் வே.சஞ்சய் விசிக

Wednesday, 19 May 2021

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) & (6) ன்படி கீழ்க்கண்ட உறுப்பினர்கள், அரசு ஊழியர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவர்.

தந்தை / வளர்ப்புத் தந்தை
தாய் / வளர்ப்புத் தாய்
கணவன்
மனைவி
மகன் / வளர்ப்பு மகன்
மகள் / வளர்ப்பு மகள்
சகோதரன்
சகோதரி
மனைவியின் தாய், தந்தை
கணவரின் தாய், தந்தை
சகோதரியின் கணவர்
சகோதரரின் மனைவி
மகளின் கணவர்
மகனின் மனைவி

தொலைதூர கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு அலுவலர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்படின் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம். அரசாணை எண். M. s. No 200, P & A. R., DT - 19.04.1996. அரசுப் பணியை தவிர வேறு எந்தப் பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. G. O. Ms. No. 893, P & A. R. DT - 23.09.1983 Rule 8(1)(aa). ஆனால் provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

எந்த ஆசிரியரும் தனியாக (Tuition) வகுப்பு நடத்தக்கூடாது. டியூஷன் நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் ஏதும் பெறாமல் மாணவர்களுக்கு தனியாக கல்வி புகட்ட தடை ஏதுமில்லை. Rule 6(17)

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் அதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலக துறைத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. Provision 1 rule 8(1)(a)

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருமானத்திலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத்தலைவரின் அனுமதி தேவை. G. O. Ms. No. 3158, Public (service - A) Dept, DT - 27.09.1974

அரசு பணிபுரிகின்ற கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத்தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். Govt. Letter. No. 29546/80 - 4, P & A. R. DT - 22.10.1980

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின்படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அதை துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். ஆனால் சொத்து அறிக்கையில் காட்ட வேண்டும். Rule 7(3)

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்தச் சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னமே பணிபுரிந்த மாவட்டமாக இருப்பின், இடமாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர்தான் சொத்து ஒன்றை கையகப்படுத்த வேண்டும். Rule 7(14)

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவோ, விற்கவோ தடை ஏதுமில்லை. Rule 7(14)(a)

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. Rule 7(16)

Record sheet அல்லது personal file - ஐ பராமரித்து வரும் அதிகாரி, ஊழியர்களின் சொத்து விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். Rule 7(9)

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7 (2) amended in G. O. Ms. No. 39, P & A. R. Dt - 9.03.2010

A Group Employees may Purchase upto Rs. 80000/-

B Group Employees may Purchase upto Rs. 60000/-

C Group Employees may Purchase upto Rs. 40000/-

D Group Employees may upto Rs. 20000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆம் ஆண்டு முடிவில் சொத்து அறிக்கை ஒன்றினை துறைத்தலைவருக்கு தாக்கல் செய்ய வேண்டும். Rule 7(3)

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருவதை அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை துறைத்தலைவர் கண்டிக்க வேண்டும். அதனையும் பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன்பிறகும் தொடர்ந்து அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த ஊழியர் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். Govt. Letter. No. 9637/A/95 - 1, P & A. R (A) Dept, dt - 24.04.1995

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத்தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். G. O. Ms. No. 9, P & A. R. (A) Dept, dt - 2.10.1985

Monday, 10 May 2021

10.05.2021 பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2021

10.05.2021 பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2021

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.


மேலும் பரமக்குடி நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 17 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் இந்த வருடமும் ரமலான் 27 அன்று 10.05.2021 பித்ரா 200 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசு விதித்த கெரானா சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விநியோகிக்கபட்டது.


அல்லாஹ் எங்கள் பனிகளை ஏற்று கொன்டு இதற்க்காக உதவி செய்த மற்றும் உழைத்த சகோதர சகோதிரிகளுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக ! ஆமீன்


S.Abdul Gafoor

President

Annai ayeisha trust paramakudi

Ramnad district

Tamil Nadu India 🇮🇳



Tuesday, 4 May 2021

ஸதக்கத்துல் ஃபித்ர் அறிவிப்பு: 2021

ஸதக்கத்துல் ஃபித்ர் அறிவிப்பு:  2021
××××××××××××××××××××××××××

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அன்னை ஆயிசா அறக்கட்டளை வழக்கம்போல் ஸதக்கத்துல் ஃபித்ர் விநியோகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
 
200 குடும்பங்கள் பயன்பெற திட்டமிட்டுள்ளோம், இன்ஷா அல்லாஹ். 10.05.2021 காலை

எனவே, எங்களின் சேவையை அல்லாஹ் ஏற்று கொண்டு மென்மேலும் தொடர  இறைவனிடம் பிராத்தனை செய்யவும்.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மைப் படுத்துவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபி  (ஸல்) அவர்கள் ஃபித்ராவை கடமையாக்கினார்கள்.
அறிவிப்பு: இப்னு அப்பாஸ்  (ரலி)
நூல்:அபூதாவுது

செய்தி/ தகவல்
அன்னை ஆயிசா அறக்கட்டளை
பரமக்குடி
இராமநாதபுரம் ஜில்லா

நிய்யத் எப்படி வைப்பது ? AAT

https://youtube.com/watch?v=JABlT-y1xF4&feature=share

நிய்யத் எப்படி வைப்பது ?
A.s.ibrahim

: தொழுகை எவ்வாறு இருக்க வேண்டும் ?

 தொழுகை எவ்வாறு இருக்க வேண்டும் 
--
Thanks & Regards

Monday, 12 April 2021

*🔥குரானில் சில வாசகங்களை நீக்கச் சொல்லி மனு*

*🔥குரானில் சில வாசகங்களை நீக்கச் சொல்லி மனு*


*🔥50 ஆயிரம் அபராதத்துடன் வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்*


http://www.adminmedia.in/2021/04/26.html



*🅰️DMINⓂ️EDIA*



நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَالَ اللَّهُ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ، إِلَّا الصِّيَامَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ "

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1904]

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ المِسْكِ»

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1894]

"لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا: إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ"

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1904]

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.

மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

[அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி 38]

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.


Sunday, 14 March 2021

அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். ஏன்?

அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். ஏன்?

1. பல மாநிலங்களிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக பயன்படுத்தப்படும்  பணம் யாருடையது?

2. ரபேல் ஆவணங்கள் அனைத்தும்
ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே பாலியல் பலாத்காரப் புகார்களும், கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

3. மோடியை முன்னிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது?

4.பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்க முன்வந்த பணக்காரர்கள் தேவை என்ன?

5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனைகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? 

7.குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

8 பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியது ஏன்?

9. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை?

10. குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே ஏன்? 

11. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? 

12 ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ? 

13. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? 

14.பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

15. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?

16. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

17. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? 

18 இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ? அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி ?

19. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?

20. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?

21. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

22. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

23. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

24. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மாயமானது? ஏன் தர மறுக்கிறீர்கள்?

25. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?

பாஜக ஆறு ஆண்டு ஆட்சியின் அவலங்களின் தொகுப்பு

1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்

11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு

21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை

31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம் 
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு

41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல்
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி

51-வியாபம் ஊழல்-தொடர் மர்ம மரணங்கள்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 8000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்

61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு

71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா

81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல் 
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
90 ஆதார் அட்டை குழா்படிகள்-

91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது 
92 கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வி.
93 CAA NRC CAB 
94 68000 கோடி மார்வாடிகளுக்கு தள்ளுபடி.
95 ஊடகங்களை மிரட்டி தன்கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது
96 உன்னா ரேப். உபியில் எம்எல்ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்னை உயிருடன் கொழுத்தி கொன்றது.  
97 பின்வாசல் வழியாக பல மாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது
98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை தர மறுப்பது
99 PM care ஊழல்..கணக்கு காட்ட முடியாது 
100 மாநிலங்களில் வாங்கிய ரேபிட் கிட்டை மத்திய அரசு பறித்தது.

இவையெல்லாம் தேசநலனா?
பதில் கிடைக்குமா?

- Surya Xavier
--
Thanks & Regards