டெல்லி: டெல்லியில் நடக்கும் ஷாகீன் பாக் போராட்டத்தில், பொய்யாக பர்தா அணிந்து உள்ளே சென்ற பெண் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அங்கிருந்த பெண்களிடம் கையும் களவுமாக மாட்டிய வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.
டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள்.
இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும். ஷாஹீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை இங்கு தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி... முழுமையான பாஜக ஆதரவு நிலைப்பாடு.. பக்காவாக ட்யூனாகி விட்ட ரஜினிகாந்த்
குலைக்க முயற்சி
இந்த போராட்டத்தை குலைக்க பல அமைப்புகள் முயன்று வருகிறது. ஏற்கனவே கபில் குஜ்ஜார் என்ற இளைஞர் இந்த போராட்டம் நடந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையே போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று குன்ஜா கபூர் என்ற பெண், ஷாகீன் போராட்டத்திற்குள் புகுந்து அங்கு கலவரம் ஏற்படுத்த முயன்று இருக்கிறார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பர்தா அணிய முடிவு
பர்தா அணிந்து சென்ற குன்ஜா கபூர், அங்கு பெண்களோடு பெண்களாக அமர்ந்து இருக்கிறார். தன்னுடைய உடைக்குள் கேமரா உள்ளிட்ட சில பொருட்களையும் அவர் மறைத்து வைத்துள்ளார். இவரின் நடத்தையை பார்த்து சந்தேகம் அடைந்த பெண்கள் அவரை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அவர் உடலில் கேமரா உள்ளிட்ட பொருட்களை வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.