Friday, 7 June 2019

Imam changing at prayer

தொழ வைக்கும் கண்ணியமிகு இமாம் அவர்களுக்கு தொண்டையில் அசௌகர்யம் ஏற்பட்டதால் உடனடி இமாம் மாறி இமாமத்தைத் தொடரும் மார்கத்தில் அனுமதிக்கப்பட்ட சட்டப்படியான ஒரு காட்சி

BJP - senkootaiyan speech

Thursday, 6 June 2019

Tamil 7th June-19.pdf

பென் பிள்ளைகள் வளர்ப்பு

10 rupees years 1907

dress code Tamil Nadu Education regarding muslim students.pdf

ஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்?*

*ஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்?*

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாமா?

صحيح مسلم

2815 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ – أَخْبَرَنِى سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِىِّ عَنْ أَبِى أَيُّوبَ الأَنْصَارِىِّ – رضى الله عنه – أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ ».

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"தொடர்ந்து'' என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான வாதமாகும்.

ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தில் இது கூறப்படவில்லை.

ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.

மேலும் இந்த நன்மை ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். ரமலான் முடிந்த மறுநாள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் ரமலானைத் தொடர்ந்து இந்த நோன்பைப் பிடிக்க முடியாமல் போய்விடும். எனவே தொடர்து என்பதன் பொருள் நாட்களால் தொடர்வது அல்ல; மாதத்தால் தொடர்வது என்ற கருத்தில் தான் பயன்படுத்தப்பட்டு இருக்க முடியும்.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தனக்கு வசதியான நாட்களில் இந்த நோன்பை நோற்கலாம். நாட்களால் தொடர்ச்சி என்று பொருள் கொண்டால் ஷவ்வால் பிறை ஒன்று பெருநாளாக உள்ளதால் ஒருவரும் தொடர்ந்து பிடிக்க முடியாமல் போய்விடும். பெண்களில் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.

எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறுநாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.

முப்பது நோன்பும், ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றன. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்குக் காரணம் கூறியுள்ளனர்.

ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம்பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்.

*சுன்னத்தான நோன்புகள்*

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக்கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்புநோற்கட்டும்.
(அல்குர்ஆன் 2:183)

என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ரமளான்மாதம் முழுவதும் நோன்பு நோற்று விட்டோம். இது அல்லாஹ்நமக்குக் கடமையாக்கிய நோன்பாகும். இவை தவிரகடமையல்லாத நோன்புகளும் உள்ளன. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வலியுறுத்திய, செயல்படுத்திய சுன்னத்தானநோன்புகள் பற்றிய விபரத்தைப் பார்ப்போம்.

*ஆறு நோன்பு*

ரமளான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புபிடிப்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். ஒன்றுக்குப் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் ரமளான்மாதம் முழுவதும் நோன்பு நோற்பது பத்து மாதங்கள் நோன்புநோற்றதற்குச் சமம். ஷவ்வாலில் ஆறுநோன்புகள் நோற்றால்அவை 60 நாட்கள் நோன்பு நோற்றதைப் போன்றாகின்றது.
எனவே ஷவ்வாலில் ஆறு நோன்பு பிடிப்பதால் ஆண்டுமுழுவதும் நோன்பு நோற்ற நன்மைகள் கிடைக்கின்றன என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
"யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்துஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர்காலமெல்லாம் நோற்றவராவார்" என அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1984, அபூதாவூத் 2078

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத்தொடர்ந்து ஷவ்வா-lல் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "தொடர்ந்து" என்ற வார்த்தையி-lருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறானவாதமாகும்.
ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும்நோன்பு நோற்று, ஷவ்வா-லும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறுநாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.

தொடர்வது என்பதற்கு "அத்பஅஹு" என்ற அரபுச் சொல்பயன்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு "முததாபிஐன்" என்ற சொல் பயன்படுத்தப் பட வேண்டும்.
உதாரணமாக, மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர்அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிதிருக்குர்ஆனில் கூறப்படுகின்றது.
(அடிமைகளை) பெற்றுக் கொள்ளாதவர், அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் சக்திபெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 58:4)

இந்த வசனத்தில் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு "முததாபிஐன்" என்ற சொல்பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வாசகம் பயன்படுத்தப்பட்டிருந்தால்ஆறு நோன்பு தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும்என்று கூறலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறுகூறப்படவில்லை.
ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்புபிடிக்கவேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்றுவைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத்தடை உள்ளது.
ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்றகருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரைதொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர்.

இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்குஎந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.
எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும்என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால்மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறு நாட்கள்நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.
முப்பது நோன்பும் ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறுநோன்புகளாகின்றது.

நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப் படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் காரணம் கூறியுள்ளனர். ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்துஅறியலாம். ஆனால் ஷவ்வால் என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்துவிட வேண்டும்.

*ஆஷுரா நோன்பு*

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷுராநோன்பு எனப்படும்.
ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2006

நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்பு நோற்காதவராக காலைப்பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்து கொள்ளட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில்நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்புநோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்கள்(பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம்அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர்: ருபைய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி),
நூல்: புகாரி 1960

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்புகட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது.
(ஹதீஸின் கருத்து)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 1592

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்புநோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போதுநபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளையூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?" என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும்நோன்பு நோற்பேன்" எனக் கூறினார்கள். ஆனால்அடுத்த ஆண்டுவருவதற்குள் மரணித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1916, அபூதாவூத் 2089

*அரபா நாள் நோன்பு*

"அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1977, அபூதாவூத் 2071

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில்நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: இப்னுமாஜா 1722

வாரத்தில் இரண்டு நோன்புகள்
நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத்தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: திர்மிதீ 676, நஸயீ 2321

*மாதத்தில் மூன்று நோன்புகள்.*

"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்கள்: முஸ்லிம் 1977, அபூதாவூத் 2071

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள்நோன்பு நோற்குமாறும், ளுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுதுவிடுமாறும் ஆகிய இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1981

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான்உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்றுவணங்குவேன்" என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி அவர்கள் என்னிடம்கேட்ட போது) "என் தாயும் தந்தையும் உங்களுக்குஅர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே!" என்றேன்.நபி (ஸல்) அவர்கள், "இது உம்மால் முடியாது. (சிலநாட்கள்) நோன்பு வைத்து, (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுது விட்டு (சிறிது நேரம்) உறங்குவீராக! ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்குநற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இதுகாலமெல்லாம் நோன்புநோற்றதற்குச் சமமாகும்" என்றார்கள். "என்னால் இதைவிடசிறப்பானதைச் செய்ய முடியும்" என்று நான் கூறினேன். "அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள்விட்டுவிடுவீராக!" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, "என்னால் இதை விடச் சிறப்பாகச் செய்யமுடியும்என்று நான் கருதுகிறேன்" என்று கூறினேன். "அப்படியானால்ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டுவிடுவீராக! இதுதான்தாவூத் நபியின் நோன்பாகும். நோன்புகளில் இதுவேசிறந்ததாகும்" என்றார்கள். "என்னால் இதைவிட சிறப்பாகச்செய்ய முடியும்" என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள்"இதை விடச் சிறந்தது எதுவும் இல்லை" என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல்: புகாரி 1976

மாதத்தில் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் 13, 14, 15ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்கள்: திர்மிதீ 692

முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான வன்முறைதாக்குதல்கள்

முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான வன்முறைதாக்குதல்கள்##

கடந்த செவ்வாய் அன்று டில்லியை சேர்ந்த சாஜித் என்ற இஞைஞர் அவர் நண்பர் கவுரவ்வுடன் டில்லியில் உள்ள ஜன்ந்தர் மோட்டில் உள்ள துணிகடையில் வேலை முடித்து திரும்பும்போது காட்டுமிராண்டி கும்பலால் கடுமையாக ராடால் தாக்கிவிட்டு பன்றிஇறைச்சியையும் ,சிறுநீரையும் உண்ணுமாறு கட்டாயபடுத்தியுள்ளது மிக மிக கடுமையான கண்டனத்திற்குரியது, 😡😡😡😡😡😡😡😡😡😡😡

முஸ்லிகளாக இருப்பது பாவமா என்று அவரின் தாயின் கதறல் 😢😢😢

HORRIFIC! A Muslim man in #Delhi was brutally attacked by an extremist mob on 28th May.

They attacked him with rods, tried to feed him pork and urinated on him. 😡😡😡😡😡😡😡😡

#India

Wednesday, 5 June 2019

Neet result 2019

என் இனிய ஆண்ட பரம்பரைகளா,

நீட் தேர்வில் தேர்வானவர்கள் எண்ணிக்கையை பார்த்தாச்சா?

SC/ST - 20,009
OBC - 63,749
Others - 7,04,335

அதாவது மொத்தமே 83758 பிற்படுத்தப்பட்ட & தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வான நிலையில் முன்னேறிய வகுப்பினர் மட்டும் 7 லட்சம் பேர் தேர்வாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு அமுலில் இருக்கிறது.
அகில இந்திய அளவில் 49.5% இடஒதுக்கீடு இருக்கிறது.

ஆனால் இந்த தேர்வு முடிவுகள் அடிப்படையில் தேர்வானவர்கள் சதவிகிதம் என்ன தெரியுமா?
12% தான்.

நீட் தேர்வு எதற்காக வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி சரியாக பயணிக்கிறது.

பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் எதிரெதிர் கட்சியில் இருந்தாலும், சமத்துவத்துக்கும் சமவாய்ப்புக்குமான அடிப்படை கட்டமைப்பை 60 ஆண்டுகளில் ஒவ்வொரு செங்கலாக கட்டி எழுப்பினர்.

அதை மூன்றே ஆண்டுகளில் உடைத்தெறிந்துவிட்டது சனாதானம்.

இனி உரக்க சொல்லுங்கள்:

திராவிடத்தால் வீழ்ந்தோம்
இந்துக்களாக இணைவோம்
இந்தி சமஸ்கிருதம் கற்போம்
எங்கள் அடுத்த தலைமுறையை கால் வயித்து கஞ்சுக்கு கோயில் வாசலில் நிற்க வைப்போம்!

#TNAgainstNEET ந முகுந்தன்

Sunday, 2 June 2019

பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2019

June
2019
பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2019
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.

மேலும் பரமக்குடி நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 15 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. ரமலான் 27 அன்று 02-06-2019 பித்ரா 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கபட்டது