Monday, 7 September 2015

மோடியின் ஒரு வருட வெளிநாட்டு பயண செலவு 37 கோடி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ஒரு ஆண்டில் ரூ.37 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் வெளிநாடுகளில் முதலீட்டை திரட்டவும், தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 20 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மேலும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமரின் பயணச் செலவு குறித்து சமூக ஆர்வலர் லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு இருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில்ஓராண்டில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அதில், ஒவ்வொரு நாடுகளுக்கும் அவர் சென்றபோது ஆன செலவு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு சென்ற வகையில் அதிகபட்சமாக ரூ.8.91 கோடியும், ஜெர்மனி, பிஜி, சீன நாடுகளுக்கு அவர் சென்ற வகையில் செலவு முறையே ரூ.2.92 கோடி, ரூ.2.59 கோடி, ரூ.2.34 கோடி ஆகும்.
பூடானுக்கு சென்ற போதுதான் மிக குறைந்த அளவில் ரூ.41.33 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில், பிரதமர் மோடி ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.5.60 கோடியாகும். அவருடன் சென்றவர்களின் கார் பயணத்துக்கு ரூ.2.40 கோடி வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது. நியூ யார்க்கில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த நியூயார்க் பேலஸ் ஓட்டல் வாடகை ரூ.9.16 லட்சம். பிரதமரின் ஓட்டல் அறை வாடகை ரூ.11.51 லட்சம். அங்கு பாதுகாப்பு படையினருக்கான கார் வாடகையாக ரூ.39 லட்சமும், தூர்தர்ஷன் குழுவினர் பிரதமரின் சுற்றுப்பயணம் குறித்து செய்தி சேகரிக்க ரூ.3 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.
சீனாவில் ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.1.06 கோடி, வாகனங்களுக்கான வாடகை ரூ.60.88 லட்சம், விமான செலவு ரூ.5.90 லட்சம், அதிகாரிகளுக்கான தின பயண செலவு ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், வங்காளசேத்துக்கான பயண செலவு ரூ.1.35 கோடி. அதில் ஓட்டலில் தங்கியதற்கான வாடகை ரூ.19.35 லட்சம். மொழி பெயர்ப்பாளர்களுக்கான செலவு ரூ.28.55 லட்சம், பிரதமரின் இன்டர்நெட் செலவு ரூ.13.83 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது
thnaks makkalmanasu.com 

Tuesday, 1 September 2015

எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொலை – இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணை!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்துத்துவா அடிப்படைவாதி களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம். கல்புர்கி கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள யரகல் கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார். கன்னடத்தில் முதுகலை படிப்பை முடித்த இவர், 1966-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். வசன இலக்கியத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய அவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு இவர் எழுதியமார்கா - 4' (வழி - 4) என்ற ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
இதுமட்டுமில்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பயணித்து பல அரிய கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு செய்தார். இதன் மூலம் கர்நாடக வரலாறு, ன்னட இலக்கியத்தின் தொன்மை, பண் பாடு குறித்த தகவல்களை ஆதா ரங்களுடன் வெளிக்கொணர்ந்தார். கல்புர்கியின் சாதனைகளை பாராட்டிபம்பா, ராணா, நிருப துங்கா' உள்ளிட்ட உயரியவிருது கள் வழங்கப்பட்டன. இறுதியாக, ஹம்பியில் உள்ள கன்னட பல் கலைக்கழகத்தில் துணைவேந்த ராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மறைந்த ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யு.ஆர். அனந்த மூர்த்தியின் நண்பரான கல்புர்கி தொடர்ந்து மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளைப் பேசி வந்தார். இதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் மூடநம்பிக்கைக்கு எதிராக வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதனால் பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன. தார் வாட் மாவட்டம் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின் வீட்டின் முன்பாக திரண்ட இந்துத்துவா அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
மாணவர் உருவில் கொலையாளி
இந்நிலையில் நேற்று காலை 8.40 மணி அளவில் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கல்புர்கியின் வீட்டு கதவை தட்டியுள்ளனர். கல்புர்கியின் மனைவி கதவை திறந்தபோது, தாங்கள் பேராசிரியரின் பழைய மாணவர்கள், அவரை பார்க்க வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தகல்புர்கி வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒருவர் கல்புர்கியின் பக்கத்தில் வந்து, ஏதோ திட்டிவிட்டு அவரது நெற்றிக்கு அருகே துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடியுள்ளனர்.
சத்தம் கேட்டு மனைவி ஓடி வந்து பார்த்தபோது, கல்புர்கி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக தார்வாட் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவி, மகள் ரூபா தர்ஷி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் கல்புர்கியின் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தார்வாட் மாவட்ட காவல் ஆணையர் ரவீந்திர பிரசாத் கூறியபோது, “முதல்கட்ட விசாரணையில் கல்புர்கிக்கு மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தாக்குதலில் எத் தகைய துப்பாக்கி உபயோகிக்கப் பட்டுள்ளது, எத்தனை குண்டுகள் உடலை துளைத்திருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும், கல்புர்கிக்கு அச் சுறுத்தலாக இருந்த இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசா ரணையை தொடங்கி இருக் கிறோம்'' என்றார்.
கல்புர்கியின் கொலை தொடர் பாக அவரது மகள் ரூபா தர்ஷி கூறியபோது, “எனது தந்தைக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் யாரும் இல்லை. மூடநம்பிக் கைக்கு எதிராகவும், இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு எதிராக வும் அவர் தொடர்ந்து பேசியதால், ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. மூட நம்பிக்கைக்கு எதிராக பேசியதால் எனது தந்தை கொடூரமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார் என சந்தேகப்படு கிறேன்'' என தெரிவித்தார்.
முதல்வர் கண்டனம்
கல்புர்கி சுட்டுக் கொல்லப் பட்டதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், மூத்த எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள னர். இது தொடர்பாக பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ராம் சேனா, ஹிந்து ஜகர்ன வேதிகே உள்ளிட்ட அமைப்புகளிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
kal_2529357f
webadmin | August 31, 2015 at 3:00 pm | Categories: all news, india | URL: http://wp.me/p5XG36-qc