Sunday, 13 March 2011

இஸ்லாமிய பார்வையில் சுனாமியும் படிப்பினையும் (ஜப்பான் சுனாமி படங்கள் இனைக்கப் பட்டுள்ளது)



அஸ்ஸலாமு அலைக்கும்,,,
 

ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்
SOURCE LINK PLS CLICK =>

24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ் கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி  நிற்கின்றன.ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக்  கொண்டே சென்று முடிவில் தன்கையையே கண் முன்னால் கொண்டு வந்தால்  அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம்
கூறுகின்றது.பட்டப் பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சுசிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது. சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும்.  15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும்.  அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது.
இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப்  பொறுத்த வரை ஒரு இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும்  முழுமை யாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்குநிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும்  போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது' அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார்.இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும், பூமியின் மேற் பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விட பட்டப் பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பது,  குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மேலும் இவ்வசனத்தில் கடலின் ஆழத்திலும் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப் பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன்
கண்டறியவில்லை. சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட போது, ஒரு
பனை மரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனை மர உயரத்திற்கு  மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள்  ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன. சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக்  ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல்நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடற்கரைக்கு அருகில் கடல்  பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது. கடலின் ஆழத்திலும் பிரமாண்ட மான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து  விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனை மர உயரத்திற்கு அது மேல் நோக்கி  வர முடிகின்றது என்று கண்டுபிடித்தனர்.ஆழ் கடலுக்கு உள்ளேயும் பேரலை கள் உள்ளன என்ற  இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.

 மேலும் அறிவியல் விளக்கங்களுக்கு பார்வையிடவும். இன்ஷாஅல்லாஹ் 

1. வருமுன் உரைத்த இஸ்லாம்


2. சுனாமியும் படிப்பினையும் இரண்டு பாகங்கள். 


3.ஆழ்கடலில்-அலைகளும்-இருள்களும்
PLS CLICK HERE =>
  http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/303/






Japan tsunami 2011

கடந்த சில மணி நேரங்களுக்கு முன் ஜப்பானில்நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, தங்கள் வீடுகளையும்குழந்தைகளையும் விட்டு பல இலட்சம் மக்கள் எங்கு இருக்கின்றனர்என்பதே தெரியாமல் தவிக்கின்றனர் இவர்களுக்காக நம் கூகுள்
உடனடியாக உதவிக் கரம் நீட்டியுள்ளது.






ஜப்பானில் இடம் மாறி இருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக கூகிள் உடனடியாக Person Finder 2011 Japan Earthquake என்ற தளத்தை உருவாக்கி கொடுத்துள்ளதுஜப்பானில் இருக்கும் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ அல்லது யாரைத்தேடுகிறீர்களோ அவர்களை பற்றிய தகவல்களை நொடியில் கொடுப்பதற்காக இந்தப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தபக்கம் உருவாக்கிய கடந்த 2 மணி நேரத்திற்குள் 1200 பேர் தங்கள் பெற்றோர்களையும், குழந்தைகளையும்உறவினர்களை தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆபத்து காலத்தில் கூகிள்
செய்யும் இந்த உதவிக்கு அனைத்து மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த  நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் நண்பர்கள் அல்லது  உறவினர்கள் யாராவது ஜப்பானில் இருந்தால் நீங்களும் இதைப் பயன்படுத்தி அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தெரிந்து
கொள்ளலாம்.மேலும் பாதிப்புகள் தொடராமல் இருக்க ஏக இறைவனை பிரார்த்திப்போம்.
இணையதள முகவரி : http://japan.person-finder.appspot.com/?lang=en









"Please don't print this e-mail unless you really need to"

Monday, 7 March 2011

சுதந்திரமா, பெண்ணுக்கா?


உலகத்தின் பெண்சுதந்திரம்
உலகமும், இந்தியாவும்
கண்ட பெண் சுதந்திரம்
என்ன சுதந்திரமாம்?
கண்ணும் , மனதும் கூசும்
பள்ளியிலே ஆரம்பிக்கிறது
பெண் குழந்தைகளின்
சுதந்திரம், அருவருப்பான
பாடலுக்கு ஒரு ஆட்டம்
கேட்டால் பள்ளி இறுதி
கொண்டாட்டம்!
மாநிலத்தில் அழகி போட்டி!
உலகளவில் ஒரு அழகி போட்டி!
பெண்ணின் அங்கங்களை அளந்து
ஒரு பூனை நடை!
ஒரு எலி நடை!
பெண்களின் உடலை மதிப்பிட்டு
மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க
வக்கிரம் கொண்ட ஆண்கள்
புடை சூழ - தாராளமாக
வந்த பெண்ணிற்கு
உலக அழகி (அருவருப்பு)பட்டம்!
உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும்
கழுகுகளுக்கு கிடைத்ததோ
ஒரு அழகி(அருவருப்பு)போட்டி!
அரைகுறை உடையுடன் நடக்க வைத்து
பண முதலைகளின் பொருள்களை விற்க
பெண்களை சந்தைப்படுத்தி
உலக அழகி (சுதந்திர) அடிமை பட்டம்!
கார் விளம்பரமா?
ஆண்கள் பயன்படுத்தும்
பொருள்களின் விளம்பரமா?
இழுத்து வா பெண்ணை
அரைகுறை ஆடையுடன்
நிற்க வை! ஆணுடன்!
கல்லூரியா? ஆணுடன்
பெண்ணையும்
கலந்து படிக்க வை!
பாய் - பிரண்ட்
கேர்ள் - பிரண்ட்
இரண்டும் இல்லையென்றால்
நீ ஒரு பைத்தியம்
இந்த உலகில்!
சிவப்பு விளக்கு
என்ற ஒரு தெரு!
அரசே அங்கீகாரம்
கொடுத்து நடத்தும்
அசிங்கங்கள்!
அசிங்கத்திற்கே
மரியாதை கொடுக்கும்
உலகத்தின் அரசாங்கங்கள்!
வக்கிரம் படைத்தவர்களுக்கு
பெண் என்றால் எல்லாவற்றையும்
துறந்து அலைய வேண்டும்!
வேஷ்டியோடு அலையும்
ஊரில் பேண்ட் போட்டுக்கொண்டு
நடந்தால் ஆச்சர்யம்!
தலைவிரி கோலத்துடன்
செய்தி வாசிக்கும் பெண்!
ஐந்துவயது பெண் குழந்தையின் 
ஆடையுடன் தொலைக்காட்சி 
நிகழ்ச்சிகள் நடத்தும் பெண்!
இறுக்கமான ஆடை அணிந்து
ஹாய், பாய் - காலேஜ் பெண்!
பெண்ணையே  திருமணம்
செய்து கொள்ளும் பெண்!
யாரோடும் வாழ்வேன் - யாரும்
என் சுதந்திரத்தில் தலையிடாதே
நவீன நரகல் பெண்கள்!
இப்படிப்பட்ட கண்ணியமற்ற
சுதந்திரம்(?) பெண்களுக்கு வேண்டுமாம்!
உலகத்தில் உள்ள வக்கிரம்
படைத்தவர்கள் கதறுகிறார்கள்!!!
நாங்கள் கொடுத்த சுதந்திரம்
ஏன் இஸ்லாத்தில் இல்லை?
எரிச்சலில் - அவதூறு
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லையாம்!
இஸ்லாம் வழங்கிய
சுதந்திரத்தை பார்த்து
எங்கள் பெண்கள் போல்
நீங்களும் வந்தால்தான்
நாங்கள் பார்க்கமுடியும்!
இப்படி புர்க்காவோடு வந்தால்
எப்படி? - பற்றி எறிகிறது
அவர்களின் வயிறு!
அந்த கலக்கத்தில்
கீழ்ப்பாக்கத்தில்
இருப்பதற்கு தகுதி படைத்த
உலக அறிவிலிகள் கதறுகிறார்கள்!
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம்
இல்லை என்று!
1432 வருடத்திற்கு முன்பே
இஸ்லாம் வழங்கிய சுதந்திரம்!
வாழ்வதற்கே சுதந்திரம்
பிற மதங்களில் இல்லை!
ஆனால் இஸ்லாத்தில்
வாழ, பேச, படிக்க
வியாபாரம் செய்ய
சொத்துக்களை தன்
பெயரில் வைத்துக்கொள்ள
சுதந்திரம்!
பிடித்த மணமகனை
தேர்வு செய்ய சுதந்திரம்!
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து
பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!
என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!

திருமணத்தில் மஹர் என்ற உரிமை!
தந்தை சொத்தில் உரிமை!
கணவன் சொத்தில் உரிமை!
மகன் சொத்தில் உரிமை!
இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!
உலகில் பெண்ணுக்கு
மனிதன் வழங்கிய சுதந்திரம்
கண்ணியமற்ற அலங்கோலம்!
உலகை படைத்த அல்லாஹ்
வழங்கிய பெண் சுதந்திரம்
கண்ணியமிக்க அந்தஸ்து!

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 33:59)

தமது பார்வைகளத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது  அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)

... தமது அலங்காரத்தை அவர்கள்  வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 24:31)


ஃபத்வா’ ஓர் விளக்கம்

பத்வா ஓர் விளக்கம்
பத்வா ஓர் விளக்கம்
மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே ஃபத்வா என்று கூறப்படும். ஃபத்வா வழங்கும் மார்க்க அறிஞர் முஃப்தி என அழைக்கப்படுவார்.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். எனவே ஒரு முஸ்லிமின் முழு வாழ்வும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவனது இபாதத்(வணக்கம்), இல்லற வாழ்வு, பொருளீட்டல் அனைத்தையும் அவன் மார்க்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படும் போது அலை அலையாகக் கேள்விக் கணைகள் எழுவது இயல்பே! எனவே மார்க்க அறிஞர்களிடம் அவற்றுக்கான தெளிவைப் பெறுதல் அவசியமாகின்றது. இந்த வகையில் ‘ஃபத்வா’ என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாகத் திகழ்கின்றது.
‘(நபியே!) உம்மிடம் அவர்கள் (‘கலாலா” பற்றி) மார்க்கத் தீர்ப்புக் கோருகின்றனர்..” (4:176)
‘(நபியே!) பெண்கள் விஷயத்தில் அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கோருகின்றனர்..” (4:127)
‘(நபியே!) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கின்றனர்..” (2:189)
‘(நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின்றனர்..” (2:217)
(மேலும் பார்க்க: 2:215, 217, 219, 5:4, 8:179:42)
மேற்படி வசனங்களில் மக்கள் கேட்கும் கேள்விகளைக் குறிப்பிடும் அல்லாஹ், அவற்றுக்கான பதில்களையும் கூறியிருப்பது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவது முக்கியமான ஒரு பணி என்பதை உணர்த்துகின்றது. அடுத்து, மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவதை அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் பணிகளில் ஒன்றாகத் திருமறைக் குர்ஆனில் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் ஃபத்வா என்பது உயர்தரமான பணி என்பதை அறியலாம்.
‘ஃபத்வா’ என்பது அல்லாஹ்வுடைய மற்றும், அவனது தூதருடைய கூற்றுகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மார்க்கத் தீர்ப்புக் கூறுகின்ற முக்கிய பணி என்பதால் இந்தப் பணியில் தகுதியற்றவர்கள் ஈடுபடக் கூடாது. மார்க்க அறிவும், ஷரீஆவின் இலட்சியங்களையும், மார்க்கச் சட்ட விதிகளையும் அறியாதவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டால் அது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணி விடும்.
எனவேதான் மார்க்கத் தீர்ப்புகளை வேண்டி நிற்பவர்கள் அந்தத் தீர்ப்புகளை மார்க்க அறிஞர்களிடம் தான் கேட்க வேண்டும். முற்காலத்தில் 99 கொலைகள் செய்த ஒருவன் தனக்கு மன்னிப்பு உண்டா என ஒரு வணக்கவாளியிடத்தில் வேண்டுகின்றான். அவர் இல்லையென்கின்றார். அவன் அவரையும் கொலை செய்து விடுகின்றான். பின்னர் ஒரு அறிஞரிடம் கேட்ட போது அவர் மன்னிப்பு உண்டெனக் கூறியதுடன் அவனுக்குத் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டினாரென ஹதீஸ் கூறுகின்றது.
தகுதியள்ளவர்கள் இந்த பணியில் ஈடுபடும்போது தேவையற்ற பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. கேள்வி கேட்பவர்களைப் பார்த்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;
‘..நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுள்ளோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.” (16:43)
அதாவது, நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் மார்க்க அறிஞர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள் எனக் கூறுவதன் மூலம் மார்க்க அறிவோ, அடிப்படைகளோ தெரியாதவர்களிடம் ஃபத்வா கேட்கக் கூடாது என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. இதே வேளை, ஃபத்வா வழங்குபவர்களைப் பார்த்து;
‘நீங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுவதற்காக இது தடை செய்யப்பட்டது, இது ஆகுமானது எனப் பொய்யாக உங்கள் நாவுகள் வர்ணிப்பதையெல்லாம் கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்” (16:116)
என்றும், அல்குர்ஆன் கூறுவதன் மூலம் மார்க்கத்துக்கு முரணாக ஃபத்வா வழங்குபவர்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகின்றனர் என்றும் அல்குர்ஆன் கண்டிக்கின்றது.
ஃபத்வாவுக்கான அடிப்படைகள்:
ஒரு ஃபத்வாவில் நான்கு அம்சங்கள் இருக்கும்:
  1. ஃபத்வாக் கேட்பவர்.
  2. ஃபத்வா வழங்குபவர்.
  3. மார்க்கக் கேள்வி.
  4. மார்க்கத் தீர்ப்பு.
1. முஃப்தி:
இவர்தான் மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துக் கூறுபவர். இவர் மார்க்க அறிவு உள்ளவராக இருப்பது முக்கிய நிபந்தனையாகும்.
‘உமக்கு எது பற்றி அறிவில்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம். நிச்சயமாக செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.” (17:36)
அறிவற்ற விஷயத்தில் தலையிடக் கூடாது என அல்குர்ஆன் கண்டிக்கின்றது. மார்க்க அறிவு அற்றோர் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பணியில் ஈடுபடக் கூடாது.
‘மானக்கேடானவற்றில் பகிரங்கமானவற்றையும், மறைவானவற்றையும், பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுவதையும், எவ்வித ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்காமல் இருக்கும் போது அவனுக்கு இணை வைப்பதையும், அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடை செய்துள்ளான் என (நபியே!) நீர் கூறுவீராக!” (7:33)
இந்த வசனம் அல்லாஹ்வின் விஷயத்தில் அறியாதவற்றைப் பேசலாகாது எனத் தடுக்கின்றது. இந்த வகையில் மார்க்க அறிவு உள்ளவர்கள்தான் மார்க்கத் தீர்ப்பு அளிக்க வேண்டும். அறிவு எனும் போது குர்ஆன், ஹதீஸுடைய அறிவுடன் உஸூலுல் குர்ஆன், உஸூலுல் ஹதீஸ், இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கங்கள் என்பவற்றையும் அறிந்திருக்க வேண்டும். இதே வேளை உலக நடைமுறை, மக்கள் நிலவரம் என்பவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
இது குறித்து இமாம் இப்னுல் கைய்யூம்(ரஹ்) அவர்கள் பேசும் போது பின்வருமாறு கூறினார்கள்; ‘ஃபத்வா வழங்குபவர் மக்களின் நிலைமைகளையும், அவர்களது சதிகள் பற்றியும் அறிந்து இருப்பது அவசியமாகும்! அப்படியில்லை எனில் அவரும் தடம் புரண்டு விடுவார்! மற்றவர்களையும் தடம் புரழச் செய்து விடுவார்!”
அடுத்து, ஃபத்வா வழங்குபவர் தனது அறிவுக்கு ஏற்ப அமல் செய்பவராக இருக்கவும் வேண்டும்.
‘நீங்கள் வேதத்தைப் படித்துக் கொண்டே, உங்களை மறந்து விட்டுப் (பிற) மனிதர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா?” (2:44)
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாத வற்றை ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது அல்லாஹ்விடம் கோபத்தால் பெரிதாகிவிட்டது.” (61:2-3)
2. தீர்ப்புக் கேட்பவர்:
தீர்ப்புக் கேட்பவர், தான் கேட்கும் கேள்விக்குக் குர்ஆன் – ஸுன்னாவின் தீர்வை எதிர்பார்த்தே கேட்க வேண்டும். சிலர் தமக்குள் ஒரு முடிவை வைத்துக்கொண்டு அந்த முடிவுதான் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கேட்பர். அல்லது அந்த முடிவு கிடைப்பதற்கு ஏற்றாற்போல் கேள்வியையும், அதற்குத் தேவையான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உருவாக்கிக்கொள்வர். இது தவறாகும். ஸுன்னாவிலிருந்து தீர்ப்புக் கூறப்பட்டால் அதைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
‘(நபியே!) உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தமக்கிடையில் ஏற்பட்ட சர்ச்சையில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பை தம் மனங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாது ஏற்று, அதற்கு முற்றிலும் கட்டுப்படும் வரை நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.” (4:65)
கேள்வி கேட்பதில் வெட்கப்படவும் கூடாது. அல்லது தனது அறிவையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்காகக் கேட்கவும் கூடாது. சிலர் ஆலிம்களைப் பரீட்சிப்பதற்காகவும், மற்றும் சிலர் தனக்கும் தெரியும் என்று காட்டிக்கொள்வதற்காகவும் கேள்வி கேட்பர். இவற்றையும் தவிர்க்க வேண்டும்.
3. கேட்கப்படும் கேள்வி:
கேட்கப்படும் கேள்வி நடைமுறையில் உள்ளதாகவும், விளக்கம் தேவையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் என்ன செய்வது? இப்படி நடந்தால் என்ன செய்வது? என்று கற்பனையில் உதிப்பதை எல்லாம் கேள்வியாக்கக் கூடாது. இப்படி சிந்தித்த சிலர், நாயும் முஸ்லிம் பெண்ணும் அல்லது பன்றியும் முஸ்லிம் பெண்ணும் உறவு கொண்டு மனிதப் பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை சுத்தமா? அசுத்தமா? என்றெல்லாம் கற்பனை செய்து இஸ்லாத்தின் ஃபிக்ஹ் எனும் துறையையே அசிங்கப்படுத்தினர்.
மற்றும் சிலர் மனிதனுக்குப் பன்றி இதயம் பொருத்தலாமா? இல்லையா? என இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு கூறி தஃவா களத்தைக் களங்கப்படுத்தினர். எனவே ஃபத்வாக் கேட்கப்படும் கேள்வி நடைமுறை வாழ்வுக்குத் தேவையானதாக இருக்க வேண்டும்.
4. மார்க்கத் தீர்ப்பு:
இது குர்ஆன் – ஸுன்னாவில் இருந்து பெறப்பட்டதாக இருப்பது அவசியமாகும். அப்போதுதான் அது மார்க்கத் தீர்ப்பாக இருக்கும்
(1) ஃபத்வாவின் தீர்ப்பு குர்ஆன் – ஸுன்னாவின் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். குர்ஆன் – ஸுன்னாவுக்கு முன்சென்ற நல்லோர்கள் அளித்த ஏகோபித்த விளக்கங்களினடிப்படையில் அந்தத் தீர்ப்பு அமைய வேண்டும். அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதமிருந்தால் அவற்றில் மிகச் சரியானதையும், வலுவானதையும் உள்ளடங்கியதாக ஃபத்வா அமைய வேண்டும்.
(2) ஃபத்வா காலத்தை உணர்ந்ததாகவும் இருக்க வேண்டும். இலகுபடுத்த வேண்டிய இடத்தில் கடுமையையோ, இறுக்கமாக இருக்க வேண்டிய இடத்தில் தளர்வையோ வழங்காததாகவும் அது அமைய வேண்டும்.
(3) ஃபத்வாவின் வாசகங்கள் மாற்றுக் கருத்துகள் வழங்கக் கூடிய விதத்திலோ, வார்த்தைகளை வைத்து விளையாடும் வண்ணமோ இருக்காமல் நேரிடையாகவும், தெளிவாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.
(4) ஃபத்வா கேட்பவர்களிடம் கேள்வியையும், பிரச்சினை என்ன என்பதையும் மிகத் தெளிவாகக் கேட்டறிந்து ஃபத்வா வழங்கப்படல் வேண்டும்.
(5) கேள்வி கேட்பவர் கேட்ட கேள்விக்கு மட்டுமன்றி அவருக்கு மேலதிக விளக்கமும் தேவை என்றிருந்தால் அதையும் தெளிவுபடுத்தும் விதத்தில் ஃபத்வா அமைந்திருத்தல் வேண்டும். ‘கடற்பயணம் செய்வோர் கடல் நீரில் உழூச் செய்யலாமா?” எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்விக்கு
மட்டும் பதில் சொல்லாமல் ‘கடல் நீர் சுத்தமானது! அதில் வாழும் உயிரினங்கள் இறந்தாலும் ஆகுமானவை!” என்று மேலதிக விளக்கத்தையும் அளித்தார்கள். இந்த அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்கும், அதனுடன் தொடர்புபட்ட கேட்கப்படாத கேள்விகளுக்கும் கூட தீர்வாக அமையும் விதத்தில் மார்க்கத் தீர்ப்பு அமைதல் வேண்டும்.
(6) பயனற்ற கேள்விகளுக்கு ஃபத்வா வழங்குவதைத் தவிர்த்துவிட்டு பயனளிக்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும்.
இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் ‘கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிப்பவன் பைத்தியக்காரனாகத்தான் இருப்பான்!” என்று கூறியுள்ளார்கள்.
இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்கள். இது குறித்துக் கேட்ட போது இதற்கு பதிலளிப்பதை விட பதிலளிக்காமல் மௌனமாக இருப்பது சிறந்ததா? என்று தீர்மானித்துத்தான் பதிலளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். சில கேள்விகளுக்கு மௌனமே சிறந்த பதிலாகவும், சில கேள்விகளுக்கு புறக்கணிப்பே சிறந்த பதிலாகவும் அமையலாம்.
2:189 வசனத்தில் ‘அவர்கள் பிறை தொடர்பாகக் கேட்கின்றனர்’ என்று கூறும் அல்லாஹ், பிறை தொடர்பாக அவர்கள் கேட்ட கேள்வியை விடுத்து அவர்களுக்கு பயனளிக்கும் பதிலை மட்டுமே அளிக்கின்றான். இந்த வகையில் பயனற்ற, ஃபித்னாவை உண்டு பண்ணக் கூடிய தீய உள்நோக்கங்களுடன் கேட்கப்படக் கூடிய கேள்விகளைப் புறக்கணித்தல் வேண்டும்.
(7) பதிலளிப்பதில் அவசரத் தன்மையைத் தவிர்க்க வேண்டும். சிலர் கேள்வி முடிவதற்கு முன்னரே பதிலளிக்க முந்தி விடுவர். கேள்வி இதுதான் என்பதும், அதற்கு உரிய பதில் என்ன என்பதும் முன் கூட்டியே தெரிந்திருந்தால் பிரச்சினை இல்லை. அப்படியில்லை என்றால் தீர்ப்புக் கூறுவதில் தீவிரம் காட்டலாகாது.
(8) தெரியாத விஷயம் குறித்துக் கேட்டால் அதற்குத் தெரியாது என்று தெளிவாகக் கூறுபவராக முஃப்தி இருக்க வேண்டும். இமாம் மாலிக்(ரஹ்), ஷாஃபீ(ரஹ்) போன்ற பெரும் பெரும் இமாம்கள் எல்லாம் தம்மிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குத் ‘தெரியாது!” என்பதையே பதிலாக அளித்துள்ளனர். இதை அவர்கள் கௌரவப் பிரச்சினையாகவோ, தம்முடைய ஆளுமையைக் குறைத்து விடக் கூடியதாகவோ கருதவில்லை.
(9) கோபம், பசி, கவலை, தூக்கம், களைப்பு, சுகவீனம் போன்ற நிலைகளில் ஃபத்வா வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
(10) ‘ஃபத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்புக்கும், ‘அல்கழா’ என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். ஃபத்வா என்பது கோர்ட் தீர்ப்பு அல்ல. அதை யாரும் யாருக்கும் திணிக்கவும் முடியாது. நீதிபதிகள் தீர்க்க வேண்டிய விஷயங்களில் தலையிடும் விதத்தில் முஃப்திகள் செயற்பட முடியாது.
(11) இஜ்திஹாதுக்கு உரிய விஷயமொன்றில் கருத்து வேறுபாடு எழுந்தால் ஃபத்வா வழங்கும் முஃப்தி நடுநிலையாகவும், தாராளத் தன்மையுடனும் தீர்ப்பு வழங்க வேண்டும்.
இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களிடம் ‘இஜ்திஹாதுக்கு உரிய மஸ்அலாவில் உலமாக்களை தக்லீது செய்வோர் கண்டிக்கப்படுவார்களா?” எனக் கேட்கப்பட்ட போது, ‘இஜ்திஹாதுக்கு உரிய மஸ்அலாவில் சில உலமாக்களின் கருத்துப் படி செயற்படுவோர் மறுக்கப்படவும் மாட்டார்கள்! வெறுக்கப்படவும் மாட்டார்கள்! இரண்டு கருத்துகளில் எந்தக் கருத்தின் அடிப்படையில் செயற்பட்டவர்களும் எதிர்க்கப்படவும் மாட்டார்கள்!..” என்று குறிப்பிடுகின்றார்கள். எனவே மஸ்அலா இஜ்திஹாதியா விஷயத்தில் நிதானமாகத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
(12) ஃபத்வாக்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனம் தேவை. எதிரும் புதிருமான ஃபத்வாக்கள் வெளியாகி பொது மக்கள் திணரும் நிலை ஏற்படக் கூடாது. இதைத் தவிர்ப்பதற்காக தகுதியற்றவர்கள் ஃபத்வா வழங்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும். ஒரு அறிஞர் குறிப்பிடும் போது ‘திருடர்களை விட ஃபத்வா வழங்கும் சிலர் சிறையில் இருக்கத் தகுதியானவர்கள்!” என்று குறிப்பிடுகின்றார்.
எனவே மருத்துவச் சான்றிதழ் பெறாதவர் மருத்துவம் செய்தால் தண்டிக்கப்படுவது போன்று அறிவு இல்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்கி சமூகத்துக்கு மத்தியில் ஃபித்னாவை ஏற்படுத்துவோர் இஸ்லாமிய சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய அரச அமைப்பு இல்லாதபட்சத்தில் ஃபத்வா வழங்க முன்வருவோர் இறை அச்சத்துடன் நான் இதற்குத் தகுதியானவன் தானா? என்பதை நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். அடுத்து, தனி நபர் ஃபத்வாவாக இல்லாமல் மார்க்க விஷயங்களைக் கூட்டு முயற்சியில் ஆராய்ந்து தீர்ப்புக் கூறும் வழிமுறையை ஜமாஅத்துகள் முன்னெடுக்கலாம்.
சமுதாயத்தில் இல்லாத புதுக் கருத்து ஒன்றை மக்கள் மன்றத்துக்கு முன்வைப்பதற்கு முன்னர் அந்த ஆய்வை ஏனைய அறிஞர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவர்களது அபிப்பிராயங்களையும் உள்வாங்கி வெளியிடும் பக்குவத்தை தீர்ப்பு வழங்குவோர் கடைப்பிடிப்பதன் மூலமும் இந்த ஃபத்வா குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் ஃபத்வா விஷயத்தில் கடைப்பிடித்த பேணுதலும், அச்ச உணர்வும், அடுத்தவரை மதித்த போக்கும் இன்றைய உலமாக்களிடமும் இடம்பெறும் என்றால் ஃபத்வாக்களால் ஏற்படும் ஃபித்னாக்களை ஒழிக்க முடியும்.
உங்களில் ஒருவரிடத்தில் ஒரு கேள்வி வந்தால் உடனேயே நீங்கள் ஃபத்வா வழங்கி விடுகின்றீர்கள். இதே போன்ற கேள்வி உமர்(ரலி) அவர்களிடம் வந்தால் தீர்ப்புப் பெறுவதற்காக அவர்கள் மற்ற ஸஹாபாக்களை ஒன்றுதிரட்டியிருப்பார்கள் என அபூ ஹுஸைன்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
கலீஃபாக்கள் ஃபத்வா விஷயத்தில் கடைப்பிடித்த பேணுதலையும், அக்கறையையுமே இது எடுத்துக் காட்டுகின்றது. இது போன்ற ஒழுங்குகள் பேணப்பட்டால் அவசியமற்ற பல ஃபத்வா பித்னாக்களை தவிர்க்க முடியும்.
எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலஃபி