நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)
(முஹம்மதே!) வேதத்திருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)
இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்மான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்
கைகளை நெஞ்சின் மீது வைத்தல்
(சரியான முறை) (சரியான முறை)
தொழுகையின் ஆரம்ப துஆ
ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி), நூல் : திர்மிதீ (245),
கைகளை தரையில் ஊன்றி எழும் முறை
கடைசி இருப்பில் மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைக்க வேண்டும். பார்க்க படம்
விரலசைத்தல்
மூன்றாம் ரக்அத்
இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதினால் போதுமானது. விரும்பியவர் வேறு துணை சூராக்களை ஓதிக்கொள்ளலாம்.
மூன்றாம் ரக்அத் முடித்த பின்னர் நான்காம் ரக்அத்திற்காக அல்லாஹு அக்பர் என்று கூறி எழ வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் கைகளை உயர்த்தியதைப் போல் நான்காம் ரக்அத்துக்கு எழும் போது கைகளை உயர்த்தாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். மற்றவை மூன்றாம் ரக்அத்தில் செய்ததைப் போன்றே செய்ய வேண்டும்.
தொழுகையில் மேற்கூறிய காரியங்கள் அனைத்தையும் நிதானமாகச் செய்ய வேண்டும். அவசரம் காட்டக் கூடாது. அவ்வாறு தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)
(முஹம்மதே!) வேதத்திருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)
இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்மான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்
நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: நஸயீ
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மாக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல் : புகாரீ
இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.
கஅபாவை முன்னோக்குதல்
தொழுபவர் எந்தத் திசையை நோக்கியும் தொழக் கூடாது. மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.
நிய்யத் (எண்ணம்)
''அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி) நூல்கள் : புகாரி (1),
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும். நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
தக்பீர் தஹ்ரீமா
தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதல் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.
இரு கைகளை உயர்த்துதல்
அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரையில் அல்லது காதின் கீழ்ப் பகுதி வரையிலும் உயர்த்த வேண்டும். அப்போது இரு கைகளையும் மடக்காமல் நீட்டிய வண்ணம் வைத்திருக்க வேண்டும். கைகளால் தோள்களையோ, காதுகளையோ தொடக்கூடாது. அதற்கு நேராகத்தான் இருக்க வேண்டும்.
கைகளை நெஞ்சின் மீது வைத்தல்
கைகளை உயர்த்தி வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும். (வலது கையை இடது கையின் மீது வைக்கலாம் அல்லது பிடிப்பதைப் போல் வைத்துக் கொள்ளலாம்.)
(சரியான முறை) (சரியான முறை)
கையைத் தொப்புளுக்குக் கீழ் வைப்பதோ, அல்லது வயிற்றில் வைப்பதோ, அல்லது நெஞ்சின் இடது புறம் வைப்பதோ கூடாது.
இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி
இரு கால்களையும் மிகவும் விரித்து வைப்பதும் கூடாது. மிகவும் சேர்த்து வைப்பதும் கூடாது. அவரவர் உடல் அமைப்புக்கு தகுந்தவாறு நடுநிலையான முறையில் இரண்டு கால்களையும் வைக்க வேண்டும்.
(தவறு) (தவறு) (சரியான முறை)
பார்வை எங்கு இருக்க வேண்டும்?
தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. முன்னால் உள்ளவர்களைப் பார்த்தால் எந்தக் குற்றமும் கிடையாது.
தொழுகையின் ஆரம்ப துஆ
கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும்.
''அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்
ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க தபாரகஸ்முக்க வத.. என்று துவங்கும் ஸனாவை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்மான செய்திகள் இல்லை.
சூரத்துல் பாத்திஹா ஓதுதல்
தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும்.
''சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : உபாதா (ரலி), நூல்கள் : புகாரீ (756),
இமாமைப் பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா?
ஜமாஅத்தாகத் தொழும் போது இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்துகளில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் மவுனமாக இமாமின் ஓதுதலைக் கேட்க வேண்டும். சப்தமில்லாமல் ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழுபவரும் ஓத வேண்டும்.
ஆமீன் கூறுதல்
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ''ஆமீன்'' கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.
துணை சூராக்கள்
சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.
முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும் துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள்.
ருகூவு செய்தல்
நிலையில் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப் பகுதி வரை, அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய வேண்டும்.
ருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் மூட்டின் மீது வைப்பதாகும். அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலையையும், முதுகையும் சமமாக வைக்க வேண்டும். தலையைத் தாழ்த்தியோ உயர்த்தியோ இருக்கக் கூடாது.
(பிடித்தல்) (சரியான முறை) (தவறான முறை)
''திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ''அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?'' என நபித்தோழர்கள் கேட்டனர். ''தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: அஹ்மத் (11106)
ருகூவில் ஓதவேண்டியவை
பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக்கூடாது.
சுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) மூன்று தடவை கூற வேண்டும்.
ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மக்ஃபிர் (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)
ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ் (வானவர்களுக்கும், ரூஹ்(ஜிப்ரீலுக்கும்) இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)
ருகூவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பி அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள்.
ருகூவிருந்து எழும் போது
ருகூவிருந்து எழும் போது ஸமிஅல்லாஹு மன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்திக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து (எங்கள் இறைவனே! உனக்கே புகழனைத்தும்) என்று கூற வேண்டும். அல்லது ரப்பனா லக்கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ என்ற துஆவையும் ஓதலாம்.
ஸமிஅல்லாஹு மன் ஹமிதா எனும் போது புறங்கைகள் மேல் நோக்கியவாறுதான் உயர்த்த வேண்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு உயர்த்துவது கூடாது.
(சரி) (தவறு)
ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா?
சிலர் ருகூவுக்குப் பின்னர் எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும். கைகளை நேராக தொங்க விடுவதே சரியான முறையாகும்.
ஸஜ்தா செய்தல்
கைகளை முதல் வைக்க வேண்டும்.
ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும். ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முதல் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்த பின்னர் தமது மூட்டுக்களை வைக்க வேண்டும்.
''உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ (1079)
ஸஜ்தாச் செய்யும் போது நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க வேண்டும். இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.
ஆடையோ, முடியோ தரையில் படாதவாறு தடுக்கக் கூடாது. மேலும் ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும். இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும். மேலும் தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.
தொடைகளை வயிறுடன் ஒட்டாமல் அகற்றி வைக்க வேண்டும். நாய் அமர்வது போன்று முன்கைகளைத் தரையில் பரப்பி வைக்கக் கூடாது.
(இரண்டுமே தவறான முறை)
ஸஜ்தாவில் ஓத வேண்டியவை
ஸஜ்தாவில் பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக் கூடாது.
சுப்ஹான ரப்பியல் அஃலா (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) மூன்று தடவை கூற வேண்டும்.
ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மக்ஃபிர் (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)
ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிகதி வர்ரூஹ் (வானவர்களுக்கும், ரூஹ் (ஜிப்ரீலுக்கும்) இறைவன் பரிசுத்தமானவன், தூய்மையானவன்)
ஸஜ்தாவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பி அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம்.
ஒருவர் ஸஜ்தாவில் இருக்கும் போது தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே கேட்கலாம்.
ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (824)
இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்
முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் ''ரப்பிக் ஃபிர்லீ ரப்பிக் ஃபிர்லீ'' என்ற துஆவை ஓத வேண்டும்.
இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே அமரும் முறை
இந்த துஆவை ஓதி முடித்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் செய்தவாறு அனைத்தையும் இரண்டாம் ஸஜ்தாவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
இரண்டாம் ரக்அத்
முதல் ரக்அத்தை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காக எழ வேண்டும். எழும் போது இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்ததைப் போல் அமர்ந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி நிலைக்கு எழ வேண்டும். பின்னர் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஸஜ்தாவிருந்து எழும் போது இரு கைகளையும் மாவு குழைப்பதைப் போல் மடக்கி தரையில் ஊன்றி எழுவது கூடாது.
கைகளை தரையில் ஊன்றி எழும் முறை
(சரியான முறை) (தவறான முறை)
இரண்டாம் ரக்அத்தில் முதல் ரக்அத்தில் ஓதியதைப் போலவே அனைத்தையும் ஓத வேண்டும். எனினும் முதல் ரக்அத்தில் ஸþரத்துல் பாத்திஹாவிற்கு முன் ஓதிய ஆரம்ப துஆக்கள் இரண்டாம் ரக்அத்தில் கிடையாது.
இரண்டாம் ரத்அத்தில் முதலாவதாக சூரத்துல் பாத்திஹாவை ஓத வேண்டும். அத்துடன் துணை சூராவையும் ஓத வேண்டும்.
பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அதில் ஓதவேண்டிய துஆக்களையும் ஓத வேண்டும்.
அத்தஹிய்யாத் இருப்பு
இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்தவுடன் இருப்பில் அமரும் போது அதற்குத் தனியான முறை இருக்கிறது.
கடைசி இருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும், இருப்பிற்குப் பிறகு தொழுகை தொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும்.
மூன்று, நான்கு ரக்அத் தொழுகைகளின் போது முதலாம் இருப்பில் இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைக்க வேண்டும். பார்க்க படம்
(சரியான முறை) (தவறான முறை) (தவறான முறை)
இருப்பின் போது அமரும் முறைகள்
இருப்பின் போது வலது கையை வலது தொடையின் மீது வைக்க வேண்டும். இடது கையை இடது தொடை மற்றும் மூட்டின் மீதும் இருக்குமாறு வைத்து முழங்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
வலது கையை வலது தொடையின் மீதும் இடது கையை இடது தொடையின் மீதும் வைக்க வேண்டும்.
வலது கையை வலது மூட்டின் மீதும், இடது கையை இடது மூட்டின் மீதும் வைக்க வேண்டும்.
ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது, பார்வை ஆட்காட்டி விரலையே நோக்கி இருக்க வேண்டும்.
அத்தஹிய்யாத் துஆ
''அத்தஹிய்யா(த்)து ல்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு
அல்லாஹும்ம ஸல் அலா முஹம்மதின் வஅலா ஆ முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத்.
''அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரீ வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி பித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.
''அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அன்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அன்தல் கஃபூருர் ரஹீம்''
மூன்றாம் ரக்அத்
நான்காம் ரக்அத்
நான்காம் ரக்அத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்த பின்னர் இருப்பில் அமர வேண்டும்.
இருப்பில் அமரும் போது மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைக்க வேண்டும். இதை முன்னரே விளக்கியுள்ளோம்
அத்தஹிய்யாத் ஓதிய பின்னரோ அல்லது மேற்கூறிய துஆக்கள் ஓதி முடித்த பின்னரோ நமக்கு ஏற்படும் தேவைகளை நமது தாய் மொழியிலேயே கேட்டு துஆச் செய்யலாம்.
ஸலாம் கூறி முடித்தல்
பிரார்த்தனை ஓதி முடித்த பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தமது வலது பக்கமும், இடது பக்கமும் ஸலாம் கூறும் போது அவர்களின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்குத் திரும்பியதைக் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது (ரலி), நூல்: முஸ்லிம்
நிதானமாகச் செய்தல்
அப்துந் நாஸர், கடையநல்லூர்