Tuesday, 25 January 2011

பெட்ரோல் விலை : பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களேஎன்று தான். இதில் நாமும் விதிவிலக்கல்ல..
ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.
பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!
விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்
1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்
அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு இத்தன கோடி நஷ்டம்என்பது தான்.
இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!!  இது மகாப் பொய்யாகும்!!
நாம் இதை  இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.
நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)
IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்
HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்
BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்
மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.
நஷ்டம் என்று அரசு கூறுவது வர வேண்டிய லாபத்தை என்றுசில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.
அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.
லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.
பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்றுஎன்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு  பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?
எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது
அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.
ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.
2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.
இது மிகப்பெரும் அநியாயமாகும்.
2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே  பெட்ரோலை லிட்டர்  54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.
எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்
உண்மையில்  தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.
ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.
இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011
Customs duty 7.5 %                :  4.75        
Import duty  5 %                     : 3.17
Tamilnadu GOVT. Tax 30%  : 19.035
Excise Duty                            : 14.45
Actual petrol price:                 : 22.07

Total Price                               : 63.45
வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்
22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.
ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..
மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.
இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!
இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!
மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.
நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.
இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!
100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.
ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு  வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.
இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.
எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூடுதலாக வரி விதிக்க காரணம்
1. தனியார் நிறுவனங்கள்
சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.
கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.
ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.
இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.
Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின்  லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.
இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.
தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.
இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.
முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.
2. வட்டி
65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.
இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.
அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.
பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.
அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.
18% எங்கே 65% எங்கே ?
பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்
மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.
இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை தான்  ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு சொந்த இடம், சொந்த வீடு, படத்திற்கு வரி விலக்குபொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.
இதுவல்லாமல் பொதுமக்களுக்கு அந்த திட்டம் இந்த திட்டம்என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.
மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.
பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.
மாநிலம் வாரியான பெட்ரோல் வரி பட்டியல்

State
oil
Petrol
Diesel
Kerosene
gas
Andhra Pradesh
4
33
22.2
4
4
Maharastra
4
25
23
4
-
Gujarat
-
23
21
-
-
Madhya Pradesh
-
28.7
23
4
4
Chattisgarh
-
22
22
4
-
Goa
-
22
21
4
4
Uttar Pradesh
4
26.5
17.2
4
-
Uttarakhand
-
25
21
12.5
-
Delhi
-
20
12.5
4
4
Himachal Pradesh
-
25
14
-
4
Jammu, Kashmir
-
20
12
4
4
Punjab
-
27.5
8.8
4
4
Rajasthan
-
28
18
4
-
Haryana
4
20
8.8
4
-
Chandigarh
-
20
12.5
4
2
தமிழ்நாடு
-
30
21.4
4
4
Pondicherry
-
12.5
12.5
-
1
Kerala
-
29
24.6
-
-
Karnataka
1
25
18
4
1
Orissa
-
18
18
4
4
Assam
-
25.7
15.5
2
4
Bihar
2
16
16
8
8
Jharakhand
-
20
14.5
4
4
West Bengal
-
25
17
4
4
Manipur
-
20
12.5
4
4
Meghalaya
-
20
12.5
4
4
Tripura
-
15
10
-
1.5
Mizoram
-
18
10
-
2
Arunachal Pradesh
-
20
12.5
4
4
nagaland
-
20
12
5
4

போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.
விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.
இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.
மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.
மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.
பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!
அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்
20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!
ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.
சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!
இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.
இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..
அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.
எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.
எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.
கட்டுரை ஆசிரியர்
S.M.அப்பாஸ்.M.I.Sc

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!


பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை கண்டித்து சமூக அக்கறையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

மதசார்பின்மையில் ஒட்டையை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு!-ராஜேந்தர் சச்சார் (ஒய்வுப் பெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி)
இந்தத் தீர்ப்பு பல விஷயங்களைப் பாதிக்கச் செய்திருப்பதுடன், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையிலேயே ஒட்டையை ஏற்படுத்திவிட்டது. பள்ளிவாசலை உடைத்து அழியுங்கள்…!’ என்று கூறுவதைப் போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவை எட்டுவதற்கு நம்பிக்கை ஒர் அடிப்படையாக இருக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாம் எங்குச் செல்வது? எதை நோக்கிச் செல்வதுஒரு குற்றத்தை யாரும் மறந்து விடக்கூடாது. ஒரு குற்றத்தைச் செய்து விட்டு எவரும் தப்பி ஒடவிடாமல் இருப்பதை உறுதி செய்வது தான் நீதிமன்றத்தின் கடமை. முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது அவர்களுக்குள்ள உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான சட்டம் சொலவது என்னவென்றால் ஒரு மகன் தந்தையைக் கொன்றால், தந்தையின் சொத்துக்களைப் பெறும் உரிமை அவனுக்கு இல்லை என்பது தான்! ஆனால் இங்கோ பாபர் பள்ளிவாசலை இடித்த குண்டர்கள் தாங்கள் விரும்பியதைப்  பெற்றிருக்கிறார்கள்.

இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது-ராஜீவ் தவான் (மூத்த வழக்குறைஞர்)
பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரு பிரிவினருக்கும் சரி சமமாகக் கூட நிலம் பிரித்துத் தரப்படவில்லை. இஸ்லாமியருக்குச் சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கும், இரு பங்கு இந்துக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது. தார்மீக நீதியும் கிடையாது. அது மட்டுமின்றி இத்தீர்ப்பு நிலத்திற்கு உரிமை கோரிய ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.
இந்த தீர்ப்பு ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. இதிலுள்ள தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் வரலாறே தவறாகிவிடும்.  இந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளைத் தாலிபான்கள் சிதைத்ததுடன் வெளிநாட்டவர்கள் ஒப்பிடுகின்றனர். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கு உரிய நிலம் அவர்களுக்கு மறுக்கப்படுவதற்கும் நீதி வழங்க மதச்சார்பற்ற நிர்வாகத்தால் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களுக்குரிய மரியாதை வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டியது இந்திய ஜனநாயகத்தின் தேவையாகும்.

நீதி பரிபாலனத்தின் சாதாரண நெறிமுறைக்கு முரணான தீர்ப்பு-அந்தி அர்ஜூனா (மூத்த வழக்குறைஞர், உச்சநீதிமன்றம்)
 பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் அது நின்ற இடத்தை இப்போது தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது போல் பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குமா? அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிக தெளிவாக விடப்பட்டுள்ள அம்சம் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சண்டித்தனத்தை கண்டிக்காதது தான்.  சர்ச்சைக்குரிய 2.72 ஏக்கர் நிலம் காலியான இடம் என்பது போல் நீதிபதிகள் கருதியுள்ளார்கள்…1992 பள்ளிவாசல் இடிப்பை இந்த தீர்ப்பு நியாயபடுத்தி அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய இரு தரப்புகளில் ஒன்று வழக்கு தொடுக்கும் போது இருந்த நிலையை தனது வசதிக்கேற்ப சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மாற்றிவிட்டால் (இந்த வழக்கில் இந்துத் தரப்பு), நீதிமன்றம் அந்த வன்செயலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நீதிமன்றங்களில் நிலவும் சாதாரண நீதி பரிபாலன முறையாகும். ஆனால் அவ்வாறு செய்வது இந்த வழக்கில் உள்ள நிலையை போல் சாத்தியமில்லை என்றால் சட்டத்தை தன் கையில் எடுத்துச் செயல்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படும் வகையில் எந்த நீதிமன்றமும் செயல்படாது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் நீதி பரிபாலனத்தின் இந்த அடிப்படையை கூட உணராது தீர்ப்பு அளித்துள்ளது
தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை இந்த தீர்ப்பு(பி.எஸ். அப்பு (முன்னாள் தலைமைச் செயலாளர் பீகார்)
மூன்று நீதிபதிகளும் பள்ளிவாசலை முஸ்லிம்கள் பயன்படுத்தினர் என்றும் பள்ளிவாசலுக்கு வெளியில் 100 எட்டு தூரத்தில் உள்ள ராம் சபூட்ரா (திண்ணையை) இந்துக்கள் பயன்படுத்தினர் என்றும் கருதியுள்ளனர். எனவே இந்த விவாகாரத்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை முஸ்லிம்களிடமும், ராம் சபூட்ரா மற்றும் சீதா கி ரோசி (சீதையின் சமையல்கட்டு) இருந்த இடத்தை  இந்துக்களிடம் ஒப்படைப்பதும் தான் நியாயமான, சாத்தியமான, நீதியான தீர்ப்பாக இருக்கும். திரேட்டா யூகத்தின் மிகப் பெரும் கதாநாயகனான ராமர், 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் சமாதியான ராமர், பள்ளிவாசலின் கும்பத்தின் கீழ் தான் பிறந்தார் என்று சொல்வது தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காத்து சட்டத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இறுதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

வரலாற்றுக்கு அவமானம் கற்பிக்கும் தீர்ப்பு-டி.என்.ஜா (வரலாற்றாசிரியர்)
வரலாற்று சான்றுகளை புறந்தள்ளும் வகையில் நம்பிக்கைகளை அனுமதிக்க கூடாது. என்ன நடந்துள்ளது என்றால் நம்பிக்கை பகுத்தறிவை வென்று விட்டதாக தோன்றுகிறது. வரலாற்றை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது நம்பிக்கை. இந்தத் தீர்ப்பு உண்மைக்கும், வரலாற்றுச் சான்றுகளுக்கும், வரலாறு எழுதியலுக்கும் இழைக்கப்பட்டுள்ள ஒரு அவமானம். தலைநகர் டெல்லியில் அனுமான் கோயில்களின் எண்ணிக்கை திடுதிடுப்பென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உரிமை இல்லாத நிலங்களில் கட்டப்படும் இந்த எண்ணற்ற அனுமன் கோயில்களால் எழும் பிரச்னைகளையும் ராமர் கோயில் பிரச்சினையோடு சேர்த்துத் தீர்க்கும்  பொறுப்புக்கு அரசம் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் ஆளாகப் போகின்றன.

ஜனநாயகத்திற்கான தகுதிகளை இழந்து நிற்கிறோம்-நானி பால்கிவாலா
(பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் பிறந்தாரா அங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் 1994ல் நரசிம்மராவ் அரசு கருத்துக் கேட்டப் போது எழுதியது)
நம்பிக்கைகள், வரலாறு, புராணம் மற்றும் உடனடி அரசியல் பிரச்சினைகளில் முடிவெடுக்க நீதிமன்றத்தை நாடுவதற்கு விரும்புகின்ற நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி இது குறித்து மிக்க ஆவலுடன் இருக்க நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது (ஜனநாயகத்திற்கான) எல்லா தகுதிகளையும், நேர்மையையும் நாம் இழந்து நிற்பதையே காட்டுகிறது.

முஸ்லிம்களை போல இந்துக்கள் அமைதியாக இருப்பார்களா?-குல்தீப் நய்யார் (அரசியல் விமர்சகர்)
பாப்ரி பள்ளிவாசல் தீர்ப்புக்குப் பிறகு நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. எங்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதன் பெருமை  முழுக்க முஸ்லிம்களுக்கே போய் சேரும். இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்களும் அவர்களே. அதற்குக் காரணம் உள்ளது.
பொதுவாக, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் எண்ணியபோதும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அத்தீர்ப்பில் திருப்தி அடையாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாகவே நிறைவேற்றியுள்ளனர். அந்த அடிப்படையில், இப்போது மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
ஒருவேளை, இத்தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக வந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று ஊகித்துப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைப் போல் அமைதியாக இருந்திருப்பார்களா? தீர்ப்பு அவர்களுக்கு முழு அளவில் சாதகமாக இல்லாதிருந்தும்கூட தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். எனவே, இத்தீர்ப்பை அவர்கள் தன்னடக்கத்தோடு ஏற்றுக்கொண்டனர் என்றோ, அதனால் முஸ்லிம்களின் அச்சம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றோ கருதுவதற்கு இடமில்லை. தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் இரு தரப்பினரும் கையாண்ட அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்பதை அனைவரும் அறிவர்.
சிறுபான்மை சமூகத்தினர், சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறும் போது பெரும்பான்மை இந்து சமுதாயம் அப்படி ஏதும் உறுதி கூற முன்வரவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1992ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.

தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது-ரொமீலா தாப்பர் (வரலாற்று ஆசிரியர்)
இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு குழுவும் தங்கள் கடவுள் இந்த இடத்தில் பிறந்தார் என்று கூறி தாங்கள் ஒரு பெரும் மதநம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு (அதாவது ராமர் பிறந்த இடம் குறித்து சங்பரிவார் ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னது போல்) பிறருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கோருவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இனி தேவையான சொத்துக்களை சுட்டிக்காட்டி சண்டையை ஏற்படுத்துவதற்காக இது போல பல ஜன்மஸ்தானங்கள் உருவாக்கப்படும். திட்டமிட்டு வரலாற்றுச் சின்னம் (பாபரி பள்ளிவாசல்) இடிக்கப்பட்டது கண்டிக்கப்படாத நிலையில் இது போன்ற இடிப்புச் செயல்களை எப்படி தடுத்து நிறுத்த இயலும்?
வரலாற்றில் நடந்தது நடந்தது தான். அதனை மாற்ற இயலாது. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்க இயலும். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் பாடங்களை கற்க இயலும். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது. இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சிதைத்துள்ளது. வரலாற்றின் இடத்தில் மதநம்பிக்கையைப் புகுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்ட பரிபாலனம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும் போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.

அநீதியின் வெளிப்பாடு-ஹர்ஷ் மந்தர் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக சேவகர்)
இந்த தீர்ப்பு நடுநிலையானது என்றும் நேர்மையானது என்றும் சில விமர்சகர்கள் கூறுவது எனக்கு வினோதமாக இருக்கின்றது. நாம் இனி பழையவற்றை மறந்து முன் செல்ல வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீதிக் கிடைப்பதை அனுபவிக்காத வரையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இயலாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த வழக்கு குற்றவியல் ரீதியாக யார் தவறு செய்தார்கள் என்பதை நிர்ணயிக்கும் வழக்கு அல்ல என்பது உண்மை தான். அனால் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ராமர் கோயில் கட்டும் இயக்கத்தின்; முக்கிய அடிப்படைகள் அனைத்தையும் கொள்கையளவில் ஏற்கும் வகையில் அமைந்துள்ளது….ராமர் கோயில் இயக்கத்தின் போர் பரணியாக அந்த இடத்தில் தான் ராமர் கோயில் கட்டுவோம்என்பதே. நம்பதகாத வரலாறு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலும், ஏமாற்று மற்றும் அடக்குமுறையின் அடிப்படையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சாசனச் சட்டத்திற்கு சவால் விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்த, அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்த ஒரு இயக்கம் வெற்றிப் பெற்றுள்ளது.

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!-சித்தார்த் வரதராஜன் (தி ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியர்)
16வது நூற்றாண்டில் அயோத்தியில் தான் துளசிதாசர் ராம் சரித் மனாஸ் நூலை எழுதினார். எனினும் அதில் ராமர் பிறந்த இடம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் அதன் பின் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து இப்போது ராமர் பிறந்த இடத்தை லக்னோ நீதிமன்றம் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்திருக்கின்றது!
இந்தியாவில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அனைத்து வகையான நம்பிக்கைகளும் இருக்கலாம். ஆனால் சட்டத்தில் எது தவறு எது சரி என்பதைத் தீர்மானிப்பதற்கான நடுவராக அந்த நம்பிக்கை மாறிவிடக்கூடாது. அதே போல், வரலாற்றுத் தவறுகளைத் திருத்துவதும், நீதி வழங்குவதற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது.

இன்ஷா அல்லாஹ், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த கோரியும், ஜனவரி 27, 2011 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னையிலும், மதுரையிலும் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம்  குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்.
                                           



Monday, 17 January 2011

108 அவசர சேவை ஆம்புலன்ஸ்

16th January, 2011
இந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியோடு அழைப்புகள் கட்டுப்பாட்டு மையத்திற்கு செல்கின்றன. அங்கிருந்து சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வண்டிகளுக்கு அழைப்புகள் திருப்பிவிடப்படு கின்றன. விபத்துகள் மட்டுமின்றி, பெண்களைச் சீண்டுதல் ஆகியவை பற்றியும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்த வசதி துவக்கப்பட்டது. இந்த சேவையைத் துவக்கிய ஐந்தாவது மாநிலம் தமிழகமாகும். 108 அழைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய இரண்டும் கட்டணமில்லாமல் மக்களுக்குக் கிடைத்தது. உண்மையிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது.
தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை கூடுதல் கவனத்தோடு பார்த்தவர்கள் ஏராளம். ஆனால் மேலும் கூர்மையோடு கவனித்தபோதுதான் இந்த விளம்பரங்களை இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே தந்துள்ளார்கள் என்பது தெரிந்தது.
சென்னையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைக் கேட்டார். மக்களுக்கு வசதி செய்து தரும் இந்த சேவைக்காக சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் இலவசமாக சேவை செய்கிறார்களோ என்று நினைத்து தான் அந்தக் கேள்வியைக் கேட்டார். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் அவருக்குக் கிடைத்தது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் விளம்பரத்திற்காக 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய் அரசால் தரப்பட்டுள்ளது.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழக்க மிட்டவர்கள், எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று மாறியுள்ளதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. மக்களுக்கு சேவை செய்யும் திட்டங்கள் என்று சொல்லிக் கொண்டு, அரசு கஜானாவிலிருந்து தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றிக் கொள்ளும் திட்டங்களில் பெரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். பத்து நிமிடங்களில் சம்பவம் நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைகிறதாகக் காட்டப்படும் விளம்பரங்களை ஒருமுறை ஒளிபரப்ப சன் டி.வி. 23 ஆயிரத்து 474 ரூபாயும், கலைஞர் டி.வி. 9 ஆயிரத்து 700 ரூபாயும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.
மக்களுக்கு வசதி என்றபோதிலும், மருத்துவத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியாகவே புதிய திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  இந்த 108 சேவை என்பது மோசடி மன்னன் சத்யம் ராமலிங்க ராஜூவின் மூளையில் உதித்ததாகும். மாநில அரசுகளிடமிருந்து பணத்தைக் கறக்கவே இந்தத்திட்டம் கொண்டு வரப்பட்டது. .
மக்கள் பணத்தையே எடுத்து தனியார் நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களின் குடும்ப நிறுவனங்களுக்கும் வாரி வழங்கிவிட்டு, இலவச சேவை என்று மக்களின் தலையில் மிளகாய் மட்டுமில்லாமல், சட்டினியே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன-தாராளமயம் பல ஒப்பனைகளோடு மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒப்பனை கலைந்துள்ளது. அதன் கோர வடிவம் அம்பலமாகியுள்ளது. கலைஞர் ஆட்சியின் தகிடு தத்தம் வேலைகளில் இதுவும் ஒன்று இன்னும் எத்தனையோ

நன்றி: ஆயிரத்தில் ஒருவன் பிளாக்ஸ்பாட்