Wednesday, 15 December 2010

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் மனைவி மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக, அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
பூனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள், நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

(
அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தா, பக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?.
ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.
நன்றி: அல் ஜன்னத் (செப்டம்பர் 2007). 
ஆக்கம்: அப்துல்லாஹ் மன்பஈ 

Tuesday, 14 December 2010

National Identity Cards Mandatory in UAE

National Identity Cards Mandatory in UAE

Authorities in the UAE are planning to set a deadline to enforce all expatriates to carry national identity cards.

The Director General of the Emirates Identity Authority (EIDA), Darwish Al Zarouni, said that all expatriates in the country should hold the national identity card for governmental, semi-governmental and private transactions towards end of 2010. In the absence to produce the cards, the expats will not be eligible to Register Cars, Transfer Ownership of Vehicles, or carry on Banking Transactions. They will also be unable to receive any service from government, semi-government or private organizations, from next year onwards. Al Zarouni re-iterated that the identity card, meant to verify identity and simplify transactions is compulsory for all Emirates, beginning next year. Next month.

Registration procedure: Applicants are required to fill up the registration form on visiting the website www.emiratesid.ae and submit the print out at any of the 24 registration centers in the country.

EIDA call center on 600 523 432

http://www.emiratesid.ae/en/home.aspx

Monday, 13 December 2010

இஸ்லாம் தனிமனிதச் சொத்தல்ல -

அல்லாஹ்வின் திருப்பெயரால்... 

இஸ்லாம் தனிமனிதச் சொத்தல்ல

 அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர் முஹம்மது நசீர் அவர்கள், தான் இஸ்லாத்தில் இணைந்த இனிய செய்தியை நமது சிற்றிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இலங்கையின் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வசித்துவரும் கிருஸ்துவ மதத்தில் நல்ல ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த நான், விவரமறிந்த நாள் முதல் அம்மதத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கடவுள் பக்தியுடனும் வாழ்ந்து கொண்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்து, சரிந்து விட்டதால், வேலை தேடி வெளிநாடு செல்லும் நிர்பந்தம் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட போது, உலகின் பல நாடுகளும் இலங்கை குடி மக்கள் சென்று வந்தார்கள். நானும் வெளிநாடு சென்று வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முனைந்த போது, சவூதி அரபியாவிற்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வினியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது சவூதி வந்து சுமார் 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இங்கு வருவதற்கு முன்பு என் உள்ளத்தில் இனம் புரியாத அச்சம் நிறைந்திருந்தது. காரணம் நூற்றுக்கு நூறு சதவீதம் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டிற்கு செல்கிறேன். நான் ஒரு கிருஸ்துவன் என்பதால் இஸ்லாம் பற்றிய பல செய்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். அரபு நாட்டில் வாழ்ந்த கிருஸ்தவர்களை மதமாற்றம் செய்து விட்டார்கள், நம்மையும் அது போன்று மதம் மாறும் படி நிர்பந்தம் செய்வார்களோ, அவ்வாறு செய்தால் என்ன செய்வது, எவ்வாறு எனது மதக் கோட்பாட்டில் நிலைத்திருப்பது என்பன போன்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன. மேலும் நான் ஒரு மாற்றுமதத்தைச் சார்ந்தவன் என்பதால் எனக்கு என்ன வேலை கொடுப்பார்கள், நான் ஒரு பட்டதாரியாக இருப்பதால் அதற்கு தகுந்த வேலையினைத் தருவார்களா? அல்லது கடினமான வேலையைக் கொடுத்து அலட்சியம் செய்து விடுவார்களா? என்னை எவ்வாறு நடத்துவார்கள் போன்ற பயமும் என்னுள் இருந்தது.
ஆனால் இங்கு வந்த சில மாதங்களிலேயே உண்மை புரிய ஆரம்பித்துவிட்டது. நான் கற்பனை செய்து, பயந்து கொண்டிருந்தது போன்று எதுவும் நடை பெறவில்லை. இங்குள்ள சூழ்நிலைகளையும், மொழியினையும் நான் அறிந்து கொள்ளும் வரை, சாதாரண வேலையைக் கொடுத்திருந்தார்கள். இங்குள்ள சூழ்நிலைகளையும், மொழியினையும் ஒரளவு புரிந்து கொண்டப் பிறகு நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் அவசியப்படும் உணவுத் தேவையை நிர்ணயம் செய்யும் பிரிவுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். எனக்குக் கீழ் பல முஸ்லிம்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் முஸ்லிம் நோயாளிகளுக்கு தேவைப்படும் உணவினைத்தான் நிர்ணயம் செய்கிறேன். இதற்கு எனது மதம் எந்த விதத்திலும் ஒரு தடையாக இருந்ததில்லை. சுமார் ஏழு வருங்டகளுக்கு மேல் இதே நிலையில் இருந்து விட்டேன். மூன்று முறை விடுமுறையில் ஊர் சென்று வந்துள்ளேன். இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தில் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் நிர்பந்தம் செய்ய வில்லை. நான் மாற்று மதத்தைச் சார்ந்தவன் என்பதால் என்னுடன் யாரும் கடுமையும் காட்ட வில்லை.
எனினும் என்னுடன் இருந்த இஸ்லாமியச் சகோதரர்கள் குறிப்பாக இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் எனக்கு இஸ்லாத்தைப்பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் இடையிடையே கூறுவார்கள். நான் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் கூறுதவற்கு எந்தவித முக்கித்துவமும் கொடுக்கவில்லை. அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டாலும் அதற்காக வருத்தப்படவும் இல்லை, சடைந்து போகவும் இல்லை. அவர்கள் சில நேரங்களில் இஸ்லாமிய நூட்களையும் தங்களது செலவில் வாங்கிக் கொண்டுவந்து எனக்குக் கொடுப்பார்கள். யாரும் அறியாத விதத்தில் தனிமையில் அமர்ந்து இந்தப் புத்தகங்களில் என்னதான் உள்ளது என்று அறிந்து கொள்வதற்காக படிக்க ஆரம்பித்தேன்.
எனது கிருஸ்துவ மதம்தான் சரியானது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இது நாள் வரை வாழ்ந்துவிட்ட எனது வாழ்வில் இந்தப் புத்தகங்கள் சிறிய ஊசலாட்டத்தை ஏற்படுத்த ஆரம்பித்து, எனது கிருஸ்துவக் கொள்கையை ஆட்டம் காணச் செய்துவிட்டது. நான் இருக்கும் கிருஸ்துவக் கொள்கையை திரும்பிப்பார்க்க வேண்டும் என்ற சிந்தனையைத் தோற்றுவித்தது.
மேலும் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் என்னுள் ஏற்பட்டது. இதனை வெளிப்படையாக யாரிடமும் சொல்வதற்கு தயங்கிக் கொண்டிருந்த போது, என் சவூதி நண்பர்கள் இதனைக் குறிப்பால் உணர்ந்து, மேலும் நான் இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்ள பல புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, மென்மேலும் இஸ்லாம் பற்றி அறிவதற்கு ஊக்கம் அளித்தார்கள்.
இஸ்லாம் குறித்த பல நூட்களைப் படித்த நான், இஸ்லாம் போதிக்கும் அதன் தூய கொள்கையால் அதன் பால் ஈர்க்கப்பட்டேன். அதன் பெயரே ஒரு சிறப்பு வாய்ந்ததாக இருப்பதை அறிந்து கொண்டேன். காரணம் தற்போதுள்ள மதங்கள் அனைத்தும் ஒரு தனிப்பட்ட நபரின், அல்லது இயக்கத்தின், அல்லது நாட்டின் பெயரிலேயே ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. கிருஸ்துவ மதம் என்பது ஏசு கிருஸ்து மதம் என்றே அழைக்கப்படுகிறது, அது போல், இலங்கையில் அதிக மக்களால் பின்பற்றப்படும் புத்த மதம் புத்தரின் பெயரால் துவக்கப்பட்டுள்ளது. இது போல்தான் அனைத்து மதங்களும். ஆனால், இஸ்லாம் என்பது எந்த தனிமனிதரின் பெயரையும் குறிக்கக் கூடியதல்ல. தனிமனிதரின், தனி இயக்கத்தின், தனிநாட்டின் பெயர்களைக் கடந்து அனைவருக்கும், அனைத்து இயக்கத்தினருக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும் சொந்தமானது, பொதுவானது, எங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என உரிமை கொண்டாட அது ஒரு தனிமனிதச் சொத்துமல்ல என்று இன்றுவரை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இஸ்லாத்தை போதித்த தூதுவர்களில் இறுதியானவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் இந்த மதம் அவருக்கும் சொந்தமானதல்ல, இந்தத் தூதுவர்களை அனுப்பிய அல்லாஹ், உலக மக்கள் அனைவரையும் நேர் வழிப்படுத்த தந்த அருள் மிக்க மதம்தான் இஸ்லாம் என்பதைப்புரிந்து கொண்டேன்.
மற்ற எல்லா மதங்களைப் போல் அல்லாமல் கடவுள் கொள்கையில் சிறந்து விளங்கும் இஸ்லாம் மனித இயற்கையோடு ஒட்டிப்போகும் உயர்ந்த கோட்பாடுகளை கொண்டு விளங்குகிறது. பின்பற்றப் பட முடியாத வரட்டுத் தத்துவங்களை விட்டும் வெகுதூரத்தில் இருக்கிறது. எனவே, இந்த இஸ்லாம், மனிதனைப்படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த மார்க்கம் என்பதை உணர்வுப் பூர்வமாக புரிந்து, நம்மை செம்மைபடுத்திக் கொள்ள சிறந்த மார்க்கம் இது தான் என்பபைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் என் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முன் வந்த போது, நான் பணி செய்யும் நிறுவனத்தில் என்னைப்போன்றே இஸ்லாமியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாத்தைத் தழுவிய இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற ஊரைச் சார்ந்த சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் வந்து மனப்பூர்வமாக இந்த புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். அல்ஹம்து லில்லாஹ். (எனக்கு நேர் வழிகாட்டிய அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும் உண்டாகட்டும்.) நான் நேர் வழி பெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நற்கூலிகள் நிறைய வழங்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
-முஹம்மது நசீர்
       

நன்றி- இஸ்லாம் கல்வி.காம்,

ASHURA FASTING - Wednesday and Thursday 15th & 16th of December 2010




K`Huk; khjj;jpy; M\Puh ehspy; nfhbatd; /gpHmt;id tpl;Lk; %]h(miy) mtHfis fhg;ghw;wpajw;fhf Nehd;G Nehw;fg;gLfpwJ.

egp(]y;) mtHfs; kjpdhtpw;F tUif je;jNghJ (K`Huk; khjk;) M\Puhehspy; åjHfs; Nehd;gpUf;f fz;lhHfs;. ePq;fs; Nehd;gpUf;fpd;w ehspd; rpwg;G vd;d? vd;W åjHfsplk; egp(]y;) mtHfs; tpdtpa NghJ> mjw;F åjHfs; ,J kfj;jhd ehshFk;. ,e;ehspy; jhd; %]h(miy) mtHfis my;yh`; fhg;ghw;wpdhd;. NkYk; /gpHmt;id-k; mtDila r%fj;jpdiuAk; (flypy;) %o;fbj;jhd;. vdNt my;yh`;Tf;F ed;wp $Wk; tpjkhf %]h(miy) mtHfs; Nehd;G Nehw;whHfs;. mjdhy; ehq;fs; Nehd;G Nehw;fpNwhk; vd;W $wpdH. egp(]y;) mtHfs; ehq;fs; jhd; %]h(miy) mtHfis gpd;gw;Wtjpy; cq;fis tpl jFjpahdtHfs; vd;W $wpdhHfs;. me;ehspy; Nehd;G Nehw;whHfs;> NkYk; Nehd;G Nehw;FkhW fl;lisapl;lhHfs;.
         mwptpg;gtH: ,g;D mg;gh];(uyp) E}y;fs;: Gfhhp> K];ypk;> mg+jh¥j;

ukshdpw;F gpwF rpwe;j Nehd;G K`Huk; khjj;jpy; Nehw;Fk; Nehd;ghFk;. flikahd njhOiff;F gpwF rpwe;j njhOif ,uTj; njhOifahFk; vd;W egp(]y;) mtHfs; $wpdhHfs;.
   mwptpg;gtH: mg+`{iuuh(uyp) E}y;: K];ypk;> e]aP

egp(]y;) mtHfsplk; M\{uh ehspd; Nehd;ig gw;wp tpdtg;gl;ljw;F mJ fle;j tUlj;jpd; ghtq;fis Nghf;fptpLk; vd;W gjpyspj;jhHfs;.
  mwptpg;gtH: mg+fjhjh(uyp) E}y;fs;: K];ypk;> jpHkpjp> mg+jh¥j;

egp(]y;) mtHfs; åjHfspd; topKiwf;F khw;wk; nra;Ak; tpjkhf m\{uh ehspd; Ke;jpa (xd;gjhk;) ehSk; Nehd;G Nehw;FkhW $wpdhHfs;. NkYk; ehd; tuf;$ba tUlk; ,Ue;NjNdahdhy; xd;gjhk; ehSk; Nehd;G Nehw;Ngd; vd;W Fwpg;gpl;lhHfs;. Mdhy; mNj tUlj;jpy; kuzkile;jhHfs;.
mwptpg;gtH: ,g;Dmg;gh];(uyp) E}y;: K];ypk;

K`Huk; khjj;jpy; xd;gjhk;> gj;jhk; ehs; Nehd;G Nehw;fyhk; K`Huk; khjj;jpy; Nehd;G Nehw;f tpUk;GNthH xUehs; Nehw;W tpl;L kw;nwhU ehis Gwf;fzpf;f $lhJ. ,uz;L ehs;fSk; Nehd;G Nehw;f Ntz;Lk;. Vnddpy; xd;gjhk; ehs; Nehw;gjw;Fz;lhd fhuzk; åjHfspd; topKiwf;F khw;wkhf ,Uf;fNtz;Lk; vd;W egp(]y;) mtHfs; Fwpg;gpl;Ls;sij ftdj;jpy; nfhs;sNtz;Lk;.

எனவே இன்ஷாஅல்லாஹ் வரும் புதண் மற்றும் வியாழக்கிழமை 15-12-2010 & 16-12-2010. அன்று நாமும் நோன்புவைத்து நம்முடன் இருப்பவர்களையும் நோன்பு வைக்குமாறு எடுத்துகூறுவோம்.


ASHURA FASTING


Fasting is kept on Ashura day in the month of Muharram, on this day Allah destroyed firaun and protected Moosa[asw] and his people.

When Prophet Muhammed[SAW] came to madinah he noticed that the Jews were fasting on the day of Ashura, he asked the Jews the purpose of their fasting and they said that Allah destroyed firaun and his people and protected Moosa[asw] and his people from the clutches of firaun.  As a thanksgiving Moosa[asw] fasted on this day and we are also following him.  Prophet [SAW] said that we have more rights than you over Moosa[asw] and he[SAW] fasted on this day and commanded other to fast on this day.
[Ibn Abbas (ra), Books: Bukhari, Muslim & Abudawood]

The best fasting after Ramadan fasting is Muharram fasting.  Night prayers are the best after the obligatory prayers. 
[Abu Huraira(ra), Books: Muslim & Nisaai]

Fasting of Ashura cleanses the previous year sins. [Abukathada(ra), Books: Muslim, Tirmidhi, Abudawood]

Prophet [saw] has advised not to imitate the Jews so to fast on 9th day along with Ashura.  Also he [saw] said that if he is alive next year he will fast the 9th day too.  But he [saw] expired in the same year.

Those who are willing to fast muharram they should not fast one day and leave the other.  They must fast both the days i.e. 9th & 10th; we must keep in mind that fasting 9th day is to differentiate from the Jews practices which were advised by our beloved Prophet Muhammed[SAW]

InshaAllah coming Wednesday and Thursday 15th & 16th of December 2010 will be the fasting; we will fast and advise other to fast on this day.

Sunday, 5 December 2010

லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள்

1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத்
தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?

இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள்
பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.


தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.


தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை
எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.


பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.


அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான
குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.


தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால்,இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.

இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ.
தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும். 
ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?


ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நபிமொழி : 094    - NABIMOZI –  094   இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
 'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். தலைவரும் பொறுப்புதாரியே! அவர் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு மனிதர் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவர். அவரின் பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி கேள்வி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியர் தன் எஜமானர் விஷயத்தில் பொறுப்புதாரியாவார். ஒவ்வொருவரும் பொறுப்புதாரியே! அவரவர் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்! என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 653)  
நவாஸ் இப்னு ஸம்ஆன்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நன்மை பற்றியும், தீமை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ''நல்லது என்பது, நற்குணம்தான். தீமை என்பது உன் உள்ளத்தை உறுத்துவதும், மக்கள் அதைப் பார்த்து விடுவதை நீ வெறுப்பதும் ஆகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 624)
bava bahurudeen bahurudeen