Friday, 19 October 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார்  4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சை மாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.
குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல்பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.
2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.
வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.
இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.
சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.
ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட, இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது.
தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.
கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.
இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22%ஐ கழித்து விட்டால் கிடைக்கப் போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது[2].
எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.
***
கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.
மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினைமின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.
மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.
2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.
அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல்படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.
அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:
1.   சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
2.        மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
3.        31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.
4.        பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.
5.        உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10%க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.
6.        திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
7.        புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.
சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.
அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.
இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:
1.        பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்தவித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
2.        இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.
அன்புடன்
கோவை. சா.காந்தி,
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

Friday, 3 August 2012

பெங்களூர் & ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம். 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான  ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார். 

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்". 

பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான். 

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார். 

மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது. 

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  எப்படியிருக்கும்

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது. 

இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு. 

ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம். 


ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன. 
  
சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான். 

நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.


ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள். 

"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர். 

இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள்.  

ஒலிம்பிக்ஸ் 2012:

ஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).

பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்ற அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை. 

இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. 

மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை  பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன்  ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 

ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு  பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)


நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது... 

IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA. 

எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல் 

"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி. 

IERA குழுவினர் 

உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். 

நீங்கள் முஸ்லிமல்லாதவரா? இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள விருப்பமா? நீங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள விரும்பும் இந்த முடிவு உங்கள் வாழ்வில் மாற்றத்தை, புத்துணர்ச்சியை கொண்டுவரலாம். aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இஸ்லாமின் மூலமான குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு மற்றும் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை மின்னூல் வடிவமைப்பில் பெற்றுக்கொள்ளுங்கள். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவேனே எல்லாம் அறிந்தவன்... 

References:
1. Auto Drivers Now Turn ‘Divine Couriers’ - karnataka muslims. link
2. Is life just a game - IERA. link
--
Alaudeen
ஒரு முஃமின் திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ:
கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ
Daawah is one of the important duty of Muslim


"Please don't print this e-mail unless you really need to"

Wednesday, 1 August 2012

PDF & Online: Holy Qur'an & Sahih ul Sitha Hadeedh E-Books

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
Assalamu Alaikum all…

Holy Quran (6 Translations + Transliteration)


Holy Quran

Easy Tips to access a Surah




Sahih Bhukari(Online & PDF)



Sahih Muslim(Online & PDF)



Sunan Nasai (PDF)





Sunan Abu Dawood(Online & PDF)


Tirmidhi (2 Books)
Jamia Sunan Tirmidi(PDF)

Shama-il Tirmidhi(Online)


Sunan Ibn Majah


Musnad Ahmad Arabic Full (Vol 1-14)

Musnad Ahmad English(Costly)


Imam Malik Muwatta(PDF)



Thanks & Regards,
     _____     Honeywell
Abdul Hakkem