Tuesday, 24 September 2024

கம்ப்யூட்டரில் அழிந்த தரவுகளை மீட்க முடியுமா? -மு. உசைன் கனி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கம்ப்யூட்டரில் அழிந்த தரவுகளை மீட்க முடியுமா?
-மு. உசைன் கனி

 தரவுகள் என்பது எல்லாத் துறைகளிலும் மிக முக்கியமானவை. குறிப்பாக நம் கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை, கோப்புகளை (files), புகைப்படங்களை, மற்றும் ஆவணங்களைத் தற்செயலாக இழந்துவிட்டால், அல்லது அழிந்து விட்டால் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.
                                                 https://www.suttuviral.com/news/394

Sunday, 22 September 2024

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

நீதிபதிகள் வரம்பு மீறி பேசுவது குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி. இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவிற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

மதச்சார்பற்ற நாட்டில் மதவெறுப்புடன் நீதிபதிகளே பேசி வருவது நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்க செய்கின்றது.

Tuesday, 10 September 2024

ராஜ தர்மம்” நிலைநாட்ட யாரிங்கே இருக்கிறார்? சா.பீட்டர் அல்போன்ஸ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

“ராஜ தர்மம்” நிலைநாட்ட யாரிங்கே இருக்கிறார்? -சா.பீட்டர் அல்போன்ஸ்
நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2024
சோமாலியா, ஏமன், சிரியா, சூடான் போன்ற  நாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை  தொலைக்காட்சியில் பார்க்கும்போது மிகவும் ஆச்சரி யமாக இருக்கும். உள்நாட்டுப்போர், இனச் சண்டை கள், சகோதர யுத்தங்கள் போன்ற வன்முறை வெறி யாட்டங்களுக்கு பல்லாண்டுகளாக பழகிப்போன அந்த மக்கள் பேரவலத்தையும், பெரும் அழிவுகளை யும் தவிர்க்கமுடியாத அன்றாட நிகழ்வுகளாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் ஒரு பகுதியில் பற்றி எரியும்போது அடுத்த பகுதியில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சக மனிதர்களின் கண்ணீரும், அழுகையும், மரணங்களும், பேரிழப்புகளும் இப்போ தெல்லாம் அவர்களை அதிகமாக பாதிப்பதில்லை. தங்களது வாழ்க்கைப் பயணத்தில் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களை அதிகமாக சந்திப்பதால் அவர் களது மனச்சாட்சிகள் மழுங்கி, இதயங்கள் மரத்துப் போனதுதான் உண்மை. இப்போதெல்லாம் நாமும் அப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்ற அச்சம் எனக்கு அடிக்கடி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வெறும் செய்தியாக, கடந்து போகலாமா?

கடந்த பத்தாண்டுகளாக மதம், சாதி, இனம் அடிப்படையில் நம் நாட்டில் நடக்கும் தனி மனித தாக்குதல்கள், சில குறிப்பிட்ட இன, மத மக்களை மற்றும் அவர்களது வாழ்வாதாரங்களை அழித்து நிர்மூலம் ஆக்குதல், பெண்களை அவமானப்படுத்தி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கு தல், ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்களை துன்புறுத்தி அவர்களது வாழ்விடங்களை விட்டு விரட்டுதல் போன்ற  நிகழ்வுகள் நமது சமூகத்தின் பெரும்பகுதியினரால் ஒரு செய்தியாக மட்டுமே பார்க்கப்பட்டு மக்கள் சாதா ரணமாகவே கடந்து போவதைப் பார்க்க முடிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் நண்பகல் நேரத்தில் ஒரு பெண்ணை வன்முறையாளன் ஒருவன் ஆயுதம் கொண்டு தாக்கி மானபங்கம் செய்யும்போது கூட, கூடுகின்ற கூட்டம் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பகிர்ந்து லைக்ஸ் பெறவேண்டும் என்று துடிக்கிறதே தவிர வன்முறையாளனை தடுத்து  அப்பெண்ணை பாதுகாக்கவேண்டும் என்று கூட்டத்தில் பெரும்பாலோர் முயற்சிப்பதில்லை. ஒரு சக மனிதரின் அபயக்குரல், அவரது மரண ஓலம்,  அவரது வேதனை மற்றும் கண்ணீர் நம்மிடம் எவ்வித சலனத்தையும் உண்டாக்கவில்லையென்றால் நமது  சமூகம் எங்கேயோ அழுகிப் போகத் தொடங்கிவிட்ட தென்பதே காலம் நமக்குத் தரும் எச்சரிக்கை!

அரசாங்கமே வன்முறையாளராக...

வெறுப்பு, துவேஷம் ஆகியவற்றின் அடிப்படை யில் சில வழிதவறிய இளைஞர்களும், சில அசாதாரண நிகழ்வுகளால் ஆவேசமடையும் பொதுமக்களும் உணர்ச்சிவசப்பட்டு இதைப் போன்ற வன்முறை களில் ஈடுபடுவதைக்கூட நம்மால் புரிந்து கொள்ள  முடிகிறது. ஆனால் ஒரு அரசாங்கமே இதைப் போன்ற  வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவதையும், பொது சமூகமும், ஊடகங்களும், நீதிமன்றங்களும் மற்ற ஜனநாயக நிறுவனங்களும் இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் கடந்து போவதை என்னவென்று சொல்வது?

கடந்த வாரம் மத்தியப் பிரதேசம் சந்தர்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக பேசிய ராம்கிரி மகராஜ் என்ற இந்துமத தலைவர் மீது புகார் அளிக்க கூட்டமாக காவல் நிலையம் சென்ற இஸ்லாமியர்களை காவல் நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்த தள்ளுமுள்ளில் சில போலீசார் தாக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதன் பேரில் போலீசார் தொடர்ந்த வழக்கில்  இஸ்லாமிய சமூகத்தின் முக்கியப் பிரமுக ரான ஹாஜி ஷெஹ்சாத் அலி என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். இவர் அந்த மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் என்றும் சொல்லப்படுகிறது. உடனடியாக அவரது வீடு புல்டோசர் கொண்டு முழுமையாக இடித்து தரை மட்டமாக்கப்படுகின்றது. இளம் பெண்கள்,  குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனை வரும் அடுத்த நேர உணவும் உடைகளும் இன்றி தெரு வில் நிற்கின்றனர். சட்டத்திற்கு விரோதமாக குற்றம்  செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதை நாம் குறை சொல்லவில்லை. ஆனால் இதில் எந்தவித தொடர்பும் இல்லாத குடும்ப உறுப்பினர்களை, வீடுகளை விட்டு வெளியேற்றி நடுத்தெருவில் நிறுத்துவது என்ன நியாயம்? இதனை “புல்டோசர் நியாயம்”என்று சொல்கிறது பாஜக.

புல்டோசர் பயங்கரம்

மத்தியப்பிரதேசத்தில் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த புல்டோசர் நியாயம் அன்றாட நடைமுறையாக மாறிவிட்டது. இந்த நிகழ்வு களின்போது பாஜகவினர் கூட்டமாக கூடி நின்று  வீடுகளை இடிக்கும் அதிகாரிகளை உற்சாகப்படுத்து வதும், அவர்களுக்கு மாலைகள், சால்வைகள் அணி வித்துப் பாராட்டுவதும், அவற்றை வீடியோ எடுத்து  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாட்டங்கள் நடத்துவதும் தினசரி நிகழ்வாகிவிட்டன. அரசாங்கமே முன்னின்று நடத்தும் இந்த “அரசு பயங்கரவாதத் தால்” பாதிக்கப்படுகின்ற மக்களில் ஒரு சிலரைத் தவிர  அனைவருமே சிறுபான்மை இஸ்லாமியராக இருப்பது தான் இந்த புல்டோசர் நியாயத்தின் முக்கிய அம்சம்.

கொடிய முதல்வர்

2017 செப்டம்பர் மாதத்தில் உபி முதலமைச்சர் ஆதித்யநாத் “பெண்களுக்கும், சமூகத்தின் நலிந்த மக்களுக்கும் எதிராக குற்றம் செய்பவர் களின் சொத்துக்களை புல்டோசர் வைத்து இடித்து நியாயம் வழங்குவேன்” என்று பகிரங்கமாக அறி வித்தார். குற்றங்களுக்கு எதிராக உடனடியாக தான்  வழங்கும் இந்த நியாயத் தீர்ப்பு நடவடிக்கைகளில் சட்டம், நீதிமன்றம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படப் போவதில்லை என்று சூசகமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் ஆதித்யநாத்தை “புல்டோசர் பாபா” என்றழைத்து பாராட்டி மகிழ்ந்த னர். ஆனால் இந்த புல்டோசர் நியாயம் பெரும்பாலும் சிறுபான்மை இஸ்லாமியர்களை நோக்கி ஏவப் பட்டதுதான் தேசத்திற்கு ஏற்பட்ட பெரும் அவலம்.

“குற்றம் செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் மட்டுமே அவர்களது சொத்துக்கள் இடிக்கப்படும். மற்றவர்களுக்கு அது பொருந்தாது” என்று பிந்த் மாவட்ட ஆட்சியர் பேசியதாக வந்த  ஆடியோ பதிவு உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கே எடுத்துச்செல்லப்பட்டது. JCB கம்பெனியின் தயாரிப்பான புல்டோசர்களை வைத்து பள்ளி வாசல்கள், மதரஸாக்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை இடித்து தள்ளுவ தால் பாஜகவினர் இந்த சட்டவிரோத நடவடிக்கை களை “Jihadi Control Board” என்று பெருமையுடன் அழைக்கின்றனர். பாஜக ஆள்கின்ற மாநிலங்களான அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிர தேசம் மற்றும் தில்லி யூனியன் பிரதேசம் ஆகிய  ஐந்து மாநிலங்களில் இது வரை 128 இஸ்லாமி யர்கள் தொடர்பான சொத்துக்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டதாகவும், அதனால் 617 குடும்பங்கள் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும். “அம்னெஸ்டி இன்டர்நேஷனல்” நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. 

வீதியில் தவிக்கும் மக்கள்

பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதிமன்றங்களை அணுக அவகாசம் கிடைப்பதில்லை. காவல் துறையினர் முதலில் வீடுகளுக்குள் புகுந்து குடியிருப்பவர்களை அடித்து விரட்டி விட்டு பொருட்களை அள்ளி வெளியே போடு வதாகவும் அதன் பின்னர் புல்டோசர் வைத்து இடிப்ப தாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகைப்படங்களோடு உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். கட்டிடங்களை இடிப்பதற்காக அரசு  சொல்லி வரும் காரணம் அக்கட்டிடங்கள் சட்டவிரோத மாக கட்டப்பட்டுள்ளன என்பதுதான். ஆனால்  இடிக்கப்பட்ட பல கட்டிடங்கள் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருப்பவை. இடிக்கப்பட்ட இஸ்லாமியரின் கட்டிடங்களை ஒட்டி இருக்கின்ற இந்துக்களின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்படுவ தில்லை.

கடந்த வாரம் மத்தியப் பிரதேச அரசால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஷெஹ்சாத் அலியின் வீடு ஒரு பெரிய பங்களா எனத் தெரிகிறது. அதனுள் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களையும் அதிகாரிகள் புல்டோசரால் நொறுக்கியுள்ளனர். வீடு விதி மீறலாக கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதினாலும் கூட வாகனங்களை அடித்து நொறுக்கு வது ஏன் என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. உரிமைகளுக்காகவும், நியாயம் கேட்டும் குரல் கொடுக்க முன்வரும் இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விதைத்து அவர்களை வாய்  பேசாத ஜனங்களாக ஆக்குவதுதான் பாஜக அரசு களின் திட்டம்  என்கிற எண்ணம் இன்று வட இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது.

வெறுப்பால் நிறைந்த  குரூர மனங்கள்

இந்த அநியாயங்களை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற வலதுசாரி பாசிச சக்திகள் இச் செயல்களையும் அதனை அரங்கேற்றும் அரசுகளை யும், அரசியல் தலைவர்களையும் “புல்டோசர் ராஜ்,  புல்டோசர் ஸ்டேட், புல்டோசர் நியாயம், புல்டோசர் பாபா, புல்டோசர் மாமா” என்றழைத்து பெருமைப் பட்டுக்கொள்வது அவர்களது மனம் எவ்வளவு வெறுப்பால் நிறைந்துள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆதித்யநாத் சென்ற இடங்களில் எல்லாம் புல்டோசர்களை நிறுத்தி வைத்து அவைகளால் அவருக்கு பெரிய மாலைகளை அணிவித்து, புல்டோ சர்களால் சிறுபான்மை மக்களது வாழ்விடங்களை இடிப்பது அவருடைய ஆட்சியின் பெரும் சாதனை என விளம்பி அதற்காகவே பாஜகவுக்கு வாக்களியுங் கள் என்று கேட்ட கொடுமையும் உ.பி.யில் நடந்தது. 

பிரதமரே ஏற்படுத்திய தலைகுனிவு

இதைவிட கொடுமையாக இந்திய ஜனநாயகமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கான ஒரு செயலை நமது பிரதமர் மோடியே செய்தார். “புல்டோசர் மூலமாக நீதியை நிலைநாட்டும் கலையை நன்றாக கற்றவர் ஆதித்யநாத்” என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உச்ச குரலில் புகழ்ந்தார். அரசியல் சட்டமும், அரசு விதிகளும், இயற்கை நீதியும்,தனி மனித உரிமைகளும் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சட்ட விரோத செயலை செய்யும் ஒரு  மாநில முதலமைச்சரை நம் தேசத்தின் பிரதமரே அதற்காக பாராட்டுவது நமது வாக்கு சீட்டு அரசியல்  எவ்வளவு கேவலமான நிலைக்கு வந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு. அரசியல் சாசன மீறல் களை தட்டிக்கேட்டு,தனி மனித மாண்புக்கும் உரிமை களுக்கும் உத்தரவாதம் தருவதற்காகவே உரு வாக்கப்பட்ட நமது உச்ச நீதிமன்றம் கண்ணையும், காதையும், வாயையும் மூடிக்கொண்டிருப்பது நமக்கு  ஏற்பட்டுள்ள மற்றுமொரு மிகப்பெரும் சோகம்.

வங்கதேசத்தின் நிலை

சிறுபான்மை இஸ்லாமியரின் நிலை இங்கே இவ்வளவு மோசமாக இருக்கும் போது, நம் அண்டை நாடான  வங்கதேசத்தில் அங்கேயுள்ள சிறுபான்மை இந்துக்களின் நிலை அதைவிட மோசமாக இருப்பதை அறிந்து நமது நெஞ்சம் பதறுகிறது. உலகமெங்கும் மதம், இனம், சாதி, மொழி ஆகிய கலாச்சார அடை யாளங்களால் “சிறுபான்மையினர்” என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் “பேரினவாதம்” என்ற  பெரும்பான்மை தத்துவத்தின் பேரால் நசுக்கப் படுவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

வங்கதேசத்தில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் சிறுபான்மை இந்து மக்கள் தங்கள் வாழ்விடங் களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இந்திய எல்லை களுக்கு அருகே ஆயிரக்கணக்கில் அநாதரவாக நிற்கின்றனர் என்ற செய்தி நம் இதயத்தைப் பிளக்கிறது. வங்கதேச இந்து, புத்திஸ்ட், கிறிஸ்டியன் கவுன்சிலின் நிர்வாகிகளும், பங்களா தேஷ் பூஜா உட்ஜப்பான் பரிஷத் நிர்வாகிகளும் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அவர்களைச் சந்தித்து 250 இடங்களில் சிறுபான்மை மக்கள் பெரு மளவில் பாதிக்கப்பட்டுள்ள விபரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்து பாதுகாப்பு கோரி யுள்ளனர். சிறுபான்மை மக்களது உணர்வுகளை மதித்து அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள தாரகேஸ்வரி இந்து  ஆலயத்திற்கு நேரில் சென்று சிறுபான்மை மக்க ளோடு தனது உடனிருப்பை உறுதி செய்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று வங்கதேச தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், சிறுபான்மை இந்து மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்து, கிறித்தவ, புத்த மதங்களைச் சார்ந்தவர்களும் அந்நாட்டின் முழு உரிமையுள்ள குடிமக்கள் என்று அறிவித்து அவர்களையும் அவர் களது உரிமைகளையும் பாதுகாப்பது புதிய அரசின் முதல் கடமை என்று அறிவித்தார். இரண்டு நாடு களிலும் பாதிக்கப்பட்டவர்கள் மதங்களால் வேறு படுத்தப் பட்டிருந்தாலும்  அந்தந்த நாடுகளில் “சிறுபான்மையினர்” என அடையாளப்படுத்தப்பட்ட வர்களே! ஆனால் நம் நாட்டில் அரசுகளே முன்னின்று இக்கொடுமைகளை செய்வதுதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மை மத மக்களின் துயரங்களும்,வேதனைகளும், அவர்கள் வாழும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளும் நாளையே முடிவடைந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஆனால் மனித நேயத்தோடு, அமரர் வாஜ்பாய் அவர்களது வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் “ராஜ தர்மத்தோடு” ஆட்சி செய்யவேண்டும் என்று நினைக்கின்ற ஒரு தலைவர் அவர்களுக்கு கிடைத்துள்ளார் என்ற வகையில் சற்று ஆறுதல் அடைகிறேன். அந்த ஆறுதல் நம் நாட்டு சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று யாசிக்கின்றேன்.

சா.பீட்டர் அல்போன்ஸ்

மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்

அஸ்ஸாமில், இஸ்லாமியர்களுக்கு அடுத்த அச்சுறுத்தல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸாமில், இஸ்லாமியர்களுக்கு அடுத்த அச்சுறுத்தல்
➖➖➖➖
 சட்டமன்றத்தில் தொழுகை இடைவேளை ரத்து - 87 வருட பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பாஜக அரசு!
➖➖➖➖
 அஸ்ஸாம் சட்டமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக வெள்ளிக்கிழமைகளில் விடப்படும் 2 மணிநேர இடைவேளையை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா.

காலனித்துவ கால நடைமுறைகளை கைவிடுவதாகவும், நாடாளுமன்றத்தின் திறனை (Productivity) அதிகரிப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக, விளக்கமளித்துள்ளார்.

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமிய உறுப்பினர்கள் நமாஸ் செய்வதற்காக காலை 11 மணிக்கு இடைவேளை விட்டு, பின்னர் மதிய உணவுக்குப் பிறகு விவாதங்களைத் தொடங்குவது நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். இந்த நடைமுறை 1937-ல் முஸ்லிம் லீக் கட்சியின் சையது சாதுல்லாவால் ( பிரிட்டிஷ் இந்தியாவின் அஸ்ஸாம் மாகாண பிரதமராக இருந்தவர்) அறிமுகப்படுத்தப்பட்டது.

தொழுகை இடைவேளையை ரத்து செய்ததை 'வரலாற்று சிறப்புமிக்க முடிவு' எனப் பெருமைகொள்ளும் அஸ்ஸாம் முதல்வர், இதற்கு உறுதுணையாக இருந்ததற்காக சபாநாயகர் பிஸ்வஜித் டைமேரி மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்றம் எந்தவித மதரீதியான சலுகைகளும் இல்லாமல் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் நேற்று, `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024' நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ததுள்ளது.
➖➖➖➖
30.08.2024

https://www.vikatan.com/government-and-politics/assam-assembly-ends-87-year-old-practice-of-2-hour-jumma-break

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மிஸ் பண்ணிடாதீங்க; அற்புதமான வாய்ப்பு: ரயில்வேயில் 11,558 காலிப்பணியிடம் அறிவிப்பு.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது தொழில்நுட்பம் சாராத, முதுநிலை அலுவலர் பிரிவில் (graduate-level posts) 8,113 பணியிடங்கள், இளநிலை அலுவலர் பிரிவில் (undergraduate-level posts) 3,445 பணியிடங்கள் என மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்கள்
* டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736,
* சரக்கு ரயில் மேலாளர் - 3,144,

* ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டண்ட் மற்றும் டைப்பிஸ்ட் - 1,507,

* சீனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர்- 732

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காலியிடங்கள்!
* கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க்- 2,022,
* கணக்கு எழுத்தர் மற்றும் டைப்பிஸ்ட்- 361,

* ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட்- 990,

கல்வி தகுதிகள் என்ன?
* வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
* சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறன் அவசியம்.

வயது வரம்பு
* டிகிரி முடித்தவர்களுக்கு காலியிடங்களுக்கு 18 முதல் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி
* முதுநிலை அலுவலர் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 14 தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.
* இளநிலை அலுவலர் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 20.

விண்ணப்ப கட்டணம்
* விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு கட்டணம் ரூ.250.

உணவு முறைப் பழக்கம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உணவு முறைப் பழக்கம்
~~~~~~~~

இரவில் சீக்கிரமே சாப்பிடச் சொல்கிறார்களே ஏன் தெரியுமா....?

 இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் அலுவலகம், தொழில்,   வேலை, வணிகம், குடும்பம்   என நிறைய கடமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன.

இதையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேருவதற்குள் தாமதமாகி விடுகிறது. 

எனினும்  இரவு நாம் உண்ணும் உணவை முடிந்த வரை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அப்படி இரவில் சீக்கிரம் உணவை உண்பதால் ஏற்படும் பயன்களைப் பற்றித்தான்  இந்தப் பதிவு


இரவில் சீக்கிரமாக உணவு சாப்பிடுவதால் அதை சரி செய்ய உடலுறுப்புகளுக்கு போதுமான நேரம் கிடைக்கும். 

இதனால் செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகுக்கும். 

ஆனால் பலரும் இரவில் தாமதமாக உண்பதால் செரிமான உறுப்புகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். 

இதனால் இரவு உணவு செரிமானமாக தாமதமாகும்.

இரவு தாமதமாக உண்பதன் மூலம் தூக்கம் தடைப்படும்.

உணவை ஜீரணிக்க உறுப்புகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் தூக்கம் நிச்சயம் தடைப்படும். 

இதுவே உணவை நேரத்தோடு உண்ணும்போது சீக்கிரமே ஜீரணமாகி நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு தூங்கும் போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்பாட்டில் ஈடுபடும். 

ஆனால் இரவு தாமதமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள ஆற்றல் முழுவதுமே உணவை ஜீரணிக்கவே செலவாகிவிடும்.

இதனால் அடுத்த நாள் மந்தமான, சோர்வான உணர்வை கொடுக்கும்.

சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் சீக்கிரம் ஜீரணம் ஆகிவிடுவதால், அடுத்த நாள் எந்த மந்தத்தன்மையும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயலாற்றலாம்.

உணவிலிருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்குப் போதுமான நேரம் கிடைக்க வேண்டும்.

இரவு உணவை முன்கூட்டியே உண்பதால் அதிக நேரம் கிடைக்கும். 

இதனால் உணவிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் வேலை சுறுசுறுப்பாக நடைபெறும்.

அதேசமயம் உணவை தாமதமாக உண்ணும் போது இந்த செயல்முறையும் தாமதமாகும்.

தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக உணவை எடுத்துக்கொண்டால் உடலில் சக்கரையை அதிகரிக்கும்.

இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இரவு நேரமே உண்பதால் சீக்கிரம் செரிமானம் ஆவதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு இரவு நேரங்களிலும் மாலை நேரங்களிலும் குறைந்து விடும்.

இதனால் இரவு தாமதமாக உண்பதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக உடலில் சேர்ந்துவிடும். 

இதனால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவில் உணவை சீக்கிரம் உண்ண வேண்டியது மிகவும் அவசியமாகும்!

இரவு நேரம் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் தாமதமாக சாப்பிடும் பழக்கம் மாறிவிடும்.

நிறைவாக உணவை மருந்தாக்குவோம்..! மருந்தை உணவாக்க வேண்டாம்...!

                                     ~ அமுதம் புக்ஸ்

முக்கிய அவசர உதவி எண்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது ஒவ்வொரு கைபேசியுலும் (Mobile phone),  கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

1.அவசர உதவி அனைத்திற்கும் — 112

2.வங்கித் திருட்டு உதவிக்கு — 9840814100

3.மனிதஉரிமைகள் ஆணையம் — 044-22410377

4.மாநகரபேருந்தில அத்துமீறல் — 09383337639

5.போலீஸ் SMS — 9500099100

6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS — 9840983832

7.போக்குவரத்து விதிமீறல் SMS — 98400 00103

8.போலீஸ் — 100

9.தீயணைப்புத்துறை — 101

10.போக்குவரத்து விதிமீறல — 103

11.விபத்து — 100, 103

12. ஆம்புலன்ஸ் — 102, 108

13.பெண்களுக்கான அவசர உதவி – 1091

14.குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098

15. அவசர காலம் மற்றும் விபத்து — 1099

16.முதியோர்களுக்கான அவசர உதவி — 1253

17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033

18.கடலோர பகுதி அவசர உதவி — 1093

19. ரத்த வங்கி அவசர உதவி — 1910

20.கண் வங்கி அவசர உதவி — 1919

21.விலங்குகள் பாதுகாப்பு — 044 -22354959/22300666

22.நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும். நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண் .

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்கு SMS - 95000 99100

இதனை அனைவருக்கும் பகிருங்கள், நன்றி!

Monday, 9 September 2024

அல்குா்ஆனை ஓதுங்கள் " அரபுக் கவிதைகள் பாடுவதை தவிருங்கள்*...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ரபீவுல் அவ்வல் 
சிந்தனைகள் 05*

அல்குா்ஆனை ஓதுங்கள்
 " அரபுக் கவிதைகள் பாடுவதை தவிருங்கள்*...

அல்லாஹ்வின் அருள்மறையான அல்குர் ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால். அதற்கு ஒரு நன்மை உண்டு. 
ஒரு நன்மை என்பது, அது போன்ற பத்து மடங்காகும். 
 "அலிஃப், லாம், மீம்" என்பதை ஒரு எழுத்து என்று கூறமாட்டேன்.
 எனினும் அலிஃப் என்பது ஒரு எழுத்து, 'லாம்' என்பது ஒரு எழுத்து. மீம்" என்பதை ஒரு எழுத்த ஆகும். 
 மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் விதம் முப்பது நன்மைகளைப் பெறுவார் "

 நபிமொழி ஜாமிவுத் திர்மதீ:2910

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، لَيُرْفَعَنَّ إِلَىَّ رِجَالٌ مِنْكُمْ حَتَّى إِذَا أَهْوَيْتُ لأُنَاوِلَهُمُ اخْتُلِجُوا دُونِي فَأَقُولُ أَىْ رَبِّ أَصْحَابِي. يَقُولُ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ "".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் அல்கவ்ஸர் ') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். 

அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். 
நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். 

உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்' என்று கூறுவேன். 
அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று கூறுவான்....

நபிமொழி புகாரி 7049.

நிச்சயமாக ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு,
ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்தான் கொண்டு சோ்க்கும் 
நபிமொழி சுனனுந் நஸாயீ 1560

அத் தக்வா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி புளியங்குடி
அத் தக்வா இஸ்லாமிய பயிலகம்

நபி (ஸல்) அவர்களின் குணநலங்கள் 1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருக்குர்ஆன் 3:159

நபி (ஸல்) அவர்களின் குணநலங்கள் 1

இங்கு உயர்ந்தோன் அல்லாஹ்,
தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தான் செய்த பேருதவியைச்
சொல்லிக் காட்டுகின்றான். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரிடம் -அதாவது தாம் கட்டளையிட்டதைப் பின்பற்றி, தடை விதித்ததைக் கைவிட்ட மக்களிடம்- இளகிய
உள்ளத்தோடும் கனிவான பேச்சோடும்
நடந்துகொண்டார்கள். இது அவர்களுக்கு இறைவன் செய்த மாபெரும் உதவியாகும்.

நளினம் நிறைந்த நபி

இதையே, "(நபியே) நீர் அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நடந்துகொண்டீர்" என
இந்த வசனம் (3:159) கூறுகின்றது.

அதாவது அல்லாஹ்வின் அருள்
உமக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் இல்லாமல் இருந்திருக்குமாயின், அவர்களிடம் நீர் எவ்வாறு நளினமாக நடந்துகொண்டிருப்பீர் என அந்த
வசனம் கேட்கின்றது.

ஹசன் அல்பசரி (ரஹ்) அவர்கள்
கூறியதாவது: இதுதான் முஹம்மத்
(ஸல்) அவர்களின் இயல்பான குணமாகும். இந்தக் குணத்துடனேயே அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்பி வைத்தான்.

மற்றொரு வசனத்தில் அல்லாஹ்
கூறுகின்றான்: உங்களில் இருந்தே ஒருதூதர் உங்களிடம் வந்துள்ளார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். அவர் உங்கள் மேல் அதிக அக்கறை உள்ளவர்; இறைநம்பிக்கையாளர்கள் மேல் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவர். (9:128)

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

(நன்றி: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 2, வெளியீடு ரஹ்மத் பதிப்பகம், சென்னை 4)

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்

▪️கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண்ணன் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்னால் சவுதி அரேபியா ரியாத் வந்துள்ளார் , ரியாத்தில் பல்வேறு பணிகளை செய்தவர் இறுதியாக ஓட்டுனர் பணியை செய்திருக்கிறார் , அதன் காரணமாக பெரும் தொகையை சாலை விதிமுறை மீறல் தண்டத் தொகையாக பெற்று தாயகம் செல்ல முடியாமல் எட்டு ஆண்டுகளாக தவித்துள்ளார்.. 

▪️இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சர்க்கரை நோய்க்கு சுயமாக மருந்து எடுத்த நிலையில் இடது காலும் கையும் செயலிழந்து ஒரு நாள் முழுவதும் அறையில் யாரும் பார்க்காத நிலையில் கிடந்து , சிலரின் உதவியால் அடுத்த நாள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முற்பட்ட நிலையில் அவருடைய ஆவணம் அனைத்தும் காலாவதி ஆகிய நிலையில் உரிமையாளரிடமிருந்து ஓடி வந்தவர் என்ற வழக்கு பின்னணியும் இருந்ததால் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையோடு  வெளியேற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் கூடும் பூங்காவில் கேட்பாரற்று கிடந்திருக்கிறார்.. 

▪️இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முன்னாள் நிர்வாகி மகன் அப்துல் ரஹ்மான் மூலமாக மாநில  தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் அவர்களை தொடர்பு கொள்ள அவர் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது அவர்களிடம் தகவலை தெரிவிக்க மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா அவர்களையும் துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீ ஆகியோரை இந்த சிரமம் மிக்க பணியில் முடுக்கி விட அனைவரும் இரவு பகல் பார்க்காமல் கடந்த ஒரு வார காலமாக இவருக்கு எக்ஸிட் அடிக்க சாலை விதிமுறைகளை மீறிய தண்டத் தொகையை அடைக்க பல்வேறு வழிகளில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் முயற்சித்து நேற்று இரவு சவுதி அரேபியாவில் இருந்து செல்ல எக்ஸிட் என்னும் ஆவணத்தை பெற்றனர்.

▪️ அதனைத் தொடர்ந்து நேற்று 4-9-2024 புதன்கிழமை இலங்கை விமான மூலம் பத்தா கிளை நிர்வாகி காரைக்குடி அம்ஸத் இப்ராஹிம் அவர்கள் பயண துணையுடன் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.. 

▪️இந்த ஒப்பற்ற பணிக்கு ரியாதில் வாழும் ஒரு தமிழர் முழு உதவியும் செய்தார் என்பது மிகுந்த போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரிய மனித மீட்பு செயலாகும்.. 

▪️மேலும் நான் பல ஆண்டு கழித்து செல்வதால் எனது மகளுக்கு மொபைல் வாங்கி கொடுக்க வேண்டும் எனவே அதையும் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார் , அதையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

▪️மேலும் பாதிக்கப்பட்ட கண்ணனை மீட்க பலரும் பல்வேறு வகையில் உதவ முன் வந்தார்கள் என்பது மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியது

▪️கண்ணன் தங்கி இருந்த இடங்களில் அவருக்கு உணவு உள்ளிட்ட இயற்கை தேவைகளை நிறைவேற்ற உதவிய RT தமிழ் உணவக ரஷாக் அஷ்ரஃப் உள்ளிட்ட நண்பர்களும் ஊழியர்களும் பத்தா கிளை பாஷா, இலங்கை லெப்பை, ஹசன் சுளை கிளை செயலாளர் நீடூர் சாதிக் மேலும் மருத்துவர் ரீதியாக உதவிய மரு. அப்துல் ஜலீல் விமான டிக்கெட் வகையில் உதவிய பக்தா கிளை செயலாளர். ரமீஷ் , ஆடிட்டர் சாஜித், அம்ஜத் உள்ளிட்ட அனைத்து மக்களும் உறுதுணையாக இருந்தார்கள் என்றால் அது மிகை இல்லை. இதற்கு உதவிய அனைவருக்கும் இதய அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ..

▪️ கடல் கடந்து கண்ணீரும் கம்பளையுமாய் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொது பூங்காவில் படுத்து நோயோடு அவதிப்பட்ட கண்ணனை மிகுந்த சிரமத்தோடு பலரின் தியாக ஒத்துழைப்போடு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் மீது கரிசனை காட்டிய மக்களும் மிகுந்த பாராட்டுக்களையும் , நன்றிகளையும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்... 

▪️இதுபோன்ற கடல் கடந்த மனிதம் காக்கும் செயல் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது , 
பிறர் நலன் பேணுவது தான் இஸ்லாம் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் உணர்த்தியதும் , தமிழர் என்ற இனமுண்டு தனியே அவருக்கு குணமுண்டு என்ற சொல்லை மெய்ப்பிக்கும்  இது போன்ற மனிதநேய சேவைகளை தொடர வாருங்கள் கரங்களை கோர்த்து அறங்களை காப்போம்... 

என்றென்றும் மனிதநேய சேவையில்..

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)
சமூக நலத்துறை 
மத்திய மண்டலம்
ரியாத் - சவுதி அரேபியா